இந்த வார டைம் பத்திரிகையின் ஆசிய பதிப்பில் வெளியாகியுள்ள பிரதான கட்டுரை மன்மோகன் சிங்கை பற்றி எழுதபட்டுள்ளது. அதில், மன்மோகன் சிங் அரசில் நிலவும் பணவீக்கம், ஊழலால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தெளிவான பொருளாதாரத் திட்டம் எதுவும் இல்லை; நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது; ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.
அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், மன்மோகன் சிங் செல்வாக்கை இழந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தனது நம்பிக்கைத் ததும்பும் சாந்தமான முகத்தை மன்மோகன் சிங் இழந்துவிட்டார். அவர் தனது அமைச்சரவை சகாக்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் திணறுகிறார்.
ஏதோ அமரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துகொண்டிருப்பது போன்று டைம்ஸ் இந்தியாவைக் கிண்டல் செய்கிறது. ஒபாமாவும் அமரிக்கப் பொருளாதாரமும் போர் நடத்துவது ஒன்றில் மட்டுமே செயற்படுகிறது. அது எப்போது மூழ்கும் என அவர்களுக்கே தெரியாது. மேற்கின் அதே பொருளாதார மாதிரியை பிரதியெடுத்த இந்திய அரசு மூழ்கிப் போவதற்கு மன்மோகன் சிங் என்ற அமரிக்க விசுவாசி மட்டுமல்ல அதன் பொருளாதாரச் சுரண்டல் அமைப்பே காரணம்.