Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக பேராசிரியர். பி.ராமசாமி அறிவிப்பு.

கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் கோவையில் வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்க்ப் போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பி.ராமசாமி , ’’ இலங்கைத் தமிழர்களின் நிலையை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி அவர்களின் உயிரைக் காக்கவோ, துயரத்தைத் துடைக்கவோ தமிழக அரசு போதிய நடவடிக்கையை எடுக்கவில்லை.கடந்த ஆண்டு நடந்த வெளிநாட்டு இந்தியர் மாநாட்டின்போது பாலஸ்தீனியர்கள் குறித்து பெரிதும் கவலைப்பட்டுப் பேசினார் பிரதமர் மன்மோகன் சிங். ஆனால் ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து அவர் ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. தற்போதைய தேவை உலக அரங்கில் தமிழர்களின் குரல் உரத்து ஒலிக்க ஒரு வலிமையான அமைப்புதான். மலேசியா, சிங்கப்பூர், கனடா, மொரீஷியஸ் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் தமிழர்கள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் ஒருங்கிணைந்து உரத்துக் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார் ராமசாமி.ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த வெளிநாட்டு இந்தியர் மாநாட்டையும் ராமசாமி புறக்கணித்தார் என்பது நினைவிருக்கலாம். ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்காத, தட்டிக் கேட்காத இந்திய அரசின் செயலைக் கண்டித்து மாநாட்டைப் புறக்கணிப்பதாக அப்போது அவர் கூறியிருந்தார்.

Exit mobile version