Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

செம்மொழி மாநாட்டிற்கு எதிர்ப்பு தமிழகம் முழுக்க 15 பேர் கைது.

ஈழத்தில் பேரினவாத இலங்கை அரசு நடத்திய படுகொலைகளும் அப்படுகொலைகளுக்கு துணை போன இந்திய அரசும். அதை மௌனமாக சகித்துக் கொண்டு நாடகம் ஆடிய கருணாநிதி உலகத் தமிழர்கள் அனைவருமே அருவறுப்பான மன நிலை அடைந்துள்ளனர். கருணாநிதி தன் அர்ப்ப நாடகங்களை மறைக்க மக்கள் வரிப்பணத்தில் 400 கோடி ரூபாய் செலவில் நடத்துவதுதான் செம்மொழி மாநாடு இதுதான் உண்மை நிலை. இந்த மாநாட்டிற்கு பரவலாக மக்களிடமும் தமிழ் அமைப்புகளிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் செம்மொழி மாநாட்டிற்கு எதிராக தமிழகம் முழுக்க துண்டுப்பிரசுரம் கொடுத்தவர்கள், போஸ்டர் ஒட்டியவர்கள், பிரச்சாரம் செய்தவர்கள் என பல தோழர்களையும் கைது செய்து சிறையிலடைத்துள்ளது கருணாநிதி அரசு.

மக்கள் கலை இலக்கியக் கழகம்

சென்னையிலும், கோவையிலும் ஒரே நேரத்தில் செம்மொழி மாநாட்டிற்கு எதிராக பிராச்சாரம் செய்து தோழர்கள் கைதாகியுள்ளனர். சென்னையில் உஷா, தம்புராஜ், மணிகண்டன் உள்ளிட்டோரை கைது செய்து சிறையிலடைத்துள்ள போலீஸ், செம்மொழி மாநாட்டு அரங்கிற்குள்ளேயே பிரசுரம் விநியோகித்த தோழர்களையும் கைது செய்துள்ளது.

நாம் தமிழர்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, கீரமங்கலம், வடவாளம், ஆவணம் உள்ளிட்ட பகுதிகளில் செம்மொழி மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போஸ்டர் மற்றும் பிட் நோட்டீஸ் அச்சடித்து வெளியிடப்பட்டது. போஸ்டர்களை பார்த்த வடகாடு போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிவா என்ற லெனின்(32), விஜய்(27), சீராளன்(29), ஆவணம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி(33), சேந்தங்குடியைச் சேர்ந்த பகலவன்(31), பனங்குளம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன்(35) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிவா என்ற லெனின், முத்துசாமி, பகலவன், சௌந்தர்ராஜன் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடிவருகின்றனர். இவர்கள் நாம் தமிழர் அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று தெரிகிறது.

Exit mobile version