பெருந்துன்பமும் கவலையும் எதிர்காலம் குறித்த பயமும் சூழ ஈழத் தமிழர்கள் அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் செய்த துரோகத்தை மறைக்க மக்கள் வரிப்பணத்தில் 400 கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. இந்த மாநாட்டில் சாதிவெறியர்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளும் சிறப்பாக கருணாநிதியில் அல்லகைகளுமே அதிகமாகக் கலந்து கொள்கிறார்கள். ஆபாசக்கவிஞன் வாலி, பா.விஜய், போன்றிரின் தலைமையிலும் சாதி வெறிக் கவிஞரும் கருணாநிதியின் முதல் தர அல்லக்கையுமான வைரமுத்து தலைமையிலும் பட்டிமனறங்கள் நடக்கிறது. இதுதான் செம்மொழிக்குச் செய்கிற சேவை. மாநாட்டில் கலந்து கொள்கிற சிவத்தம்பியில் தொடங்கி அத்தனை பேரும் கருணாநிதியை குளிப்பட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இன்று கிளம்பிற்று பார் சிங்கக் கூட்டம்( டேய் என்னாங்கடா இது தலைப்பு…இதுக்கும் செம்மொழிக்கும் என்னடா சம்பந்தம்) என்ற தலைப்பில் பட்டிமன்றல் எல்லோருமே கருணாநிதியை வாழ்த்து கவிதை பாடினார்கள். உச்சக்கட்டமாக ஈரோடு தமிழன்பன் என்னும் அல்லக்கை கவிஞர் சங்ககாலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அவ்வை, அதியமானோடு கருணாநிதியை ஒப்பிட்டு கவிதை படித்தார்.
ஈரோடு
தமிழன்பன் வாசித்த கவிதை…
”பிறக்காத குழந்தைக்கும் தொட்டில் கட்ட அவரிடம்தான் இதயம் இருக்கிறது. இருப்பும் இருக்கிறது.
கலைஞர் என்பது தாயின் ஆண்பால் பெயர்.
அவர் வேட்டி கட்டுகிறார்.
அவர் இதயம் எப்போதும் கசங்காத புடவையோடுதான்.
அவரின் கபால களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களை விட
ஈர பெண் எண்ணங்களே அதிகம்.
இல்லாவிட்டால் கோபாலபுரத்து வீட்டை கொடையாக தர முடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில் இவர் இருந்திருந்தால்
அந்த அதியமான் ஏமாந்திருப்பார்.
அவருடைய சங்கப் பாடல்களுக்கெல்லாம்
கலைஞர் சபாநாயகர் ஆகியிருப்பார்.
அந்த நெல்லிக்கனி இன்று இருந்தால் கலைஞர் யாருக்கு கொடுப்பார்?
வாலிக்கா? வைரமுத்துவுக்கா? அப்துல் ரகுமானுக்கா? இல்லை எனக்கா?.
எங்களில் யாருக்கும் தரமாட்டார்.
தமிழ்த்தாய்க்கு தந்து அவள் தின்று துப்பிய விதைகளை
ஒவ்வொரு கவிஞரின் வீட்டு வாசலிலும் விதைத்து வைப்பார்.
கவிதையை ஜனநாயகப்படுத்தியவர் கலைஞர்.
அதனால்தான் கவிஞர்களும் கலைஞருக்கு வாக்களிக்கிறார்கள்!”இதுதான் செம்மொழி மாநாடு இதற்குத்தான் 400 கோடி.