Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“செப்டம்பர் 11 -தாக்குதலுக்கு முன் ஒசாமாவுடன் அமெரிக்காவுக்கு நெருங்கிய தொடர்புண்டு”

 

செப்டம்பர் 11இல் இரட்டை கோபுரம் மீதான அல்கய்டாவின் தாக்குதலுக்கு முன்பு வரை அமெரிக்க அரசுக்கும், ஒசாமா பின்லேடனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என எஃப்.பி.ஐ. முன்னாள் பணியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ.யில் துருக்கி மொழிபெயர்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சிபெல் எட்மண்ட்ஸ். கடந்த சில நாட்களுக்கு முன் வானொலிக்கு இவர் அளித்த பேட்டியில், செப்டம்பர் 11இல் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பு வரை ஒசாமாவுடன் அமெரிக்கா நட்பு பாராட்டி வந்தது. அந்தக் குழுவினரின் உதவியுடன் மத்திய ஆசியாவில் சில காரியங்களை அமெரிக்கா நடத்தியது.

சீனாவின் ஜிங்ஜியாங் பகுதியில் தாலிபான், அல்கய்டா அமைப்பினரைப் பயன்படுத்தி அமெரிக்கா செயல்பட்டது. அதாவது எதிரிகளை மறைமுகமாகத் தாக்குதவதற்கு சமமான யுக்தி இது என சிபெல் எட்மண்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1979-89 வரையிலான காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் மீது ரஷ்யா படையெடுத்த போது, அப்பகுதி தீவிரவாதிகளை ரஷ்யாவுக்கு எதிராக திருப்பி, ஆப்கானிஸ்தான் படையினருக்கு அமெரிக்கா உதவியது நினைவில் கொள்ளத்தக்கது.

Exit mobile version