முன்னதாக நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 720 கோடி டாலர் கொடுத்து வாங்கியிருந்தது. அதன்பின் வரி பிரச்சினை காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா ஆலை மைக்ரோசாப்ட் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என பில்கேட்சின் மைக்ரோசாப்ட் அறிவித்தது.
உலகின் தகவல் தொழிநுட்பட வளர்ச்சியையே பின்னோக்கி நகர்த்திய பெருமை மைக்ரோசாப்டையும் பில்கேட்சையும் சாரும். வரி முறைகேடுகளிலிருந்து நாடுகளுக்கு இடையேயான போர் மற்றும் உள் நாடுகளில் சீரழிவு நடவடிக்கைகள் வரஒ மைக்ரோசாப்ட் தலைமை தாங்கி நடத்திவருகிறது.
நோக்கியா விலைகொடுத்து வாங்கப்பட்டதும் சிக்கல்கள் உள்ள் சென்னை ஆலையை மட்டும் தவிர்த்துக்கொள்ள இந்திய அரசு மைக்ரோசப்டிற்கு அனுமதி வழங்கி தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டது.
இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்திருந்தது. கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரி பாக்கி தொடர்பாக நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
பின்லாந்து நாட்டை சேர்ந்த இந்த தொழிற்சாலை வெறும் 50 கோடி டாலர் முதலீட்டில் 2006ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் 8 ஆயிரம் பேர் நேரடியாகவும், 12 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் பணிபுரிந்து வந்தனர்.
இப்போது மக்களின் பெரும்தொகைப்பணத்தைச் சுருட்டிக்கொண்ட நிறுவனம் அவர்களைத் தெருவில்விட்டுவிட்டு தப்பிக்கொண்டது.
இந்நிலையில் நோக்கியா இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தொழிலாளர்களின் கருத்துகளை கேட்காமல் அவர்களாகவே கையெழுத்து போட்டுள்ளனர். எனவே எங்களுக்கு இழப்பீடு வேண்டாம் வேலை தான் வேண்டும் என கூறி சனிக்கிழமை காலை சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை நுழைவு வாயில் அருகே திரண்டு திடீரென ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.