Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சென்னை – காதலியை பாலியல் வன்முறை செய்ய காதலனைக் கொன்ற கொடூரம்.

தனியார் மயம் தாரள மயம் அறிமுகமான இந்த பதினைந்து ஆண்டுகளில் மக்களின் பெரும்பாலான இந்திய மக்களின் வாழ்வு வறுமையை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறது. வறுமையால் தற்கொலையின் விளிம்பில் தள்ளப்படும் ஏழைகள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கொலை, கொள்ளை, பெண்கள் மீதான வன்முறை இதெல்லாம் அதிகரித்துச் செல்கிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கொலைகளும் கொள்ளைகளும் அதிகரித்துச் செல்கிறது. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் என்று அரசால் சுட்டுக்காட்டப்பாட்டோரை காவல்துறை சுட்டுக் கொன்றும் கூட மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி யாராவது கேள்வி கேட்டால் உடனே கருணாந்தி. கேரளத்தில்ம் கர்நாடகத்தில், ஆந்திராவில் எவ்வளவு கொலை கொள்ளைகள் நடக்கிறது தமிழகத்தில் எவ்வளவு கொலை கொள்ளைகள் நடக்கிறது என்று புள்ளிவிபரங்களை பட்டியலிடுவார். இந்நிலையில் விழுப்புரத்தைச்

சேர்ந்தவர் சரவணன். இவர் பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளார். அங்கு சலூன் கடை வைத்திருந்தார். இவருடைய அத்தை தனலட்சுமி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.அத்தை வீட்டுக்கு அடிக்கடி வருவார் சரவணன். அப்போது அதேபகுதியில் வசிக்கும் நான்சி என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது. நான்சி பி.சி. முடித்து விட்டு சர்ச் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.காதலியைப் பார்ப்பதற்காக அடிக்கடி சென்னை வருவார் சரவணன். அப்போது அவரும், நான்சியும், ஆளரவமில்லாத கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையத்திற்குப் போய் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம்.அதேபோல நேற்றும் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. காதலர்கள் தனிமையில் இருப்பதைப் பார்த்த அவர்களிடம் நெருங்கி கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். அவர்களை சரவணன் தட்டிக் கேட்டுள்ளார்.ஆனால் அதைப் பொருட்படுத்தாத அந்த கும்பல், நான்சியை பாலியல் வன்முறை செய்ய முயன்றனர். இதைத் தடுக்க முயன்றார் சரவணன். இதையடுத்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தியது அக்கும்பல். இதில் சரவணன் அங்கேயே உயிரிழந்தார்.இதைப் பார்த்து நான்சி கதறினார். அதை கண்டுகொள்ளாத அக்கும்பல் நான்சி அணிந்திருந்த தங்க் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டது.தகவல் போலீஸாருக்குக்கிடைத்ததும் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஷகீல் அகமது உள்ளிட்டோர் விரைந்து வந்தனர். கொலையாளிகள் ரவுடிக்கும்பலாக இருக்கக் கூடும். அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Exit mobile version