சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இந்திய சட்ட மாமேதை டாக்டர் அம்பேதகரின் உருவச் சிலையைத் திறக்க தமிழக முதல்வர் கருணாநிதி வருவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஈழப் போர்க்காலத்தில் போர் நிறுத்தம் கோரிய வழக்கறிஞர்கள் மீது காண்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய போலீசைப் பாதுகாக்கும் கருணாநிதிக்கு எதிராக வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்பைச் சமாளிக்க உயர்நீதிமன்றத்திற்குள் தலித் தலித் அலலதோர் பிரச்சனைக்கு தூபம் போட்டு துண்டி விட்ட கருணாநிதியின் தந்திரத்தைப் புரிந்து கொண்ட வழக்கறிஞர்கள் அமைதி காத்தனர். இந்நிலையில் இன்று சிலை திறப்பு விழா நடந்தது. விழா மேடையில் கருணாநிதி இருந்தார் அவர் பேசது துவங்கும் போது முன்வரிசையில் அமர்ந்திருந்த சில வழக்கறிஞர்கள் கையில் கருப்புக் கொடியோடு எழுந்து கருணாநிதிக்கு எதிராக கோஷமிட்டனர். இதைச் சற்றும் எதிர்பாராத கருணாநிதி அதிச்சியடைந்தார். இந்நிலையில் கருப்புக் கொடியோடு கோஷமிட்ட வழக்கரிஞர்கள் மீது திமுக ரௌடிகள் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தினார்கள். தலைமை நீதிபதியும், கருணாநிதிக்கு முந்நிலையிலும் இது நடந்தது. கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கறிஞர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். கருணாநிதிக்கு எதிர்ப்புத் தெரிவித்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள். கருணாநிதிக்கு காட்டப்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கும் கருணாநிதிக்குமான போராட்டம் மீண்டும் தீவிரமடையும் எனத் தெரிகிறது. முன்னர் போலீசை வைத்துத் தாக்கிய கருணாநிதி இப்போது திமுக ரௌடிகளை விட்டு வழக்கறிஞர்களைத் தாக்கியுள்ளார்.