Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சென்னை இலங்கை தூதரகத்தை மூட வேண்டும்- 14-ல் ஆர்ப்பாட்டம்- வைகோ.

கொடநாடு எஸ்டேட்டில் இருந்து சென்னை திரும்பிய ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் இருக்கிற அவரது இல்லத்தில் சந்தித்தார் வைகோ பின்னர் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மூட வேண்டும் என அறிக்கை விட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே அரசு, தனது போர் குற்றங்களை மறைப்பதற்காக உலகில் இதுவரை எந்த நாடும் செய்யத் துணியாத செயல்களில் ஈடுபட்டுள்ளது.இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மூவர் குழுவை .நா. பொதுச்செயலர் பான் கி மூன் அமைத்தார்.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள .நா. அலுவலகத்தை அமைச்சர் வீரவன்ச தலைமையில் சென்றவர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். பான் கி மூன் உருவப்படத்தை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த வன்முறை வெறியாட்டங்கள் உலக நாடுகளின் மனசாட்சிக்கு விடப்பட்ட அறைகூவலாகும்.
இந்தத் தாக்குதலுக்கு உலகின் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. .நா. குழுவை எதிர்க்கும் ஆணவம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டதற்கு இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தருகின்ற ஆதரவுதான் காரணம்..நா. அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களை, குறிப்பாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை மூட வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ. இந்நிலையில் தூதரகத்தை அப்புறப்படுத்தக் கோரி வருகிற 14-ம் தியதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version