Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சென்னையில் முக்கடலையும் வென்றிட்ட கூட்டம் : கருணாநிதி

சென்னை, அக்.25-

சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட மனிதச்சங்கிலி குறித்து, தமிழ் இன மக்களின் முக்கடலையும் வென்றிட்ட கூட்டம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமைதி வழியில்…

இலங்கை தமிழர்களை காக்கவும் – அவர்தம் உரிமைகளை அறவழியில் – அமைதி வழியில் – அரசியல் ரீதியாக வாதாடி, போராடிப் பெறுகின்ற வழிமுறைகளை பின்பற்றி தி.மு.க முயற்சிகளை மேற்கொண்டு – அதற்கு ஒத்து வருகின்ற கட்சிகள், இலங்கை தமிழர்பால் பரிவு கொண்ட இயக்கங்கள் – அவற்றின் தலைவர்கள் – முன்னோடிகள் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு – அவர்களும் ஈடுபாடு கொண்டு நடத்திய பல போராட்டங்களையும் – செய்த தியாகங்களையும் உலகம் முழுதும் இலங்கை தமிழர்களுக்காக கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் தமிழர் தம் தூய நெஞ்சங்கள் அறியும்.

படுகொலைகளாலும், பட்டினியாலும் அங்கு தமிழ் மக்கள் மாண்டு மடிந்து கொண்டிருக்கிறார்கள். சிங்கள ராணுவம் பொழிகின்ற குண்டுகளால் தினம் தினம் அழிகின்றது தமிழ் இனம். அந்த அழிவிலிருந்து நம் இனத்தை மீட்க நாமெல்லாம் ஒன்று கூடி இந்தியப் பேரரசின் உதவியை நாடி நிற்கின்றோம்.

இந்திய துணை கண்டத்தில் இப்படி உதவி கேட்டு ஓலமிடும் அனாதை கூட்டமாக – ஒரு காலத்தில் இலங்கையையே ஆண்ட பரம்பரையாய் விளங்கிய அந்த தமிழ் இனம் இன்று தவியாய் தவித்து நிற்கிறது. அந்த தவிப்பை போக்க ஈழத் தமிழ் இனத்தில் இளஞ்சிறார், குழந்தைகள் எனும் புல் பூண்டுகளை கூட அழித்து விடத்துடிக்கும் இனப்படுகொலையை தடுக்க வழி காண வேண்டுமென்பதற்கு தான் கடந்த அக்டோபர் 14-ம் நாள் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து, அரசின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினோம்.

வீண் போகவில்லை

அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்தியப் பேரரசு ஏற்று நடவடிக்கை எடுத்திடும் என்ற நம்பிக்கையோடு உரியவர்களுக்கு அனுப்பி வைத்தோம், நம்பிக்கை வீண்போகவில்லை. இதற்குமுன்பே – அக்டோபர் 6-ந் தேதி மயிலை மாங்கொல்லையில் இலங்கை தமிழர் பாதுகாப்புக்கென பொதுக் கூட்டம் ஒன்றினை கூட்டி நானும் பேராசிரியரும் பேசுவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டம் அறிவிக்கப்பட்ட அந்நாள் காலையில் பிரதமர் மன்மோகன் சிங் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அப்போது அவரிடம் நான் புது டெல்லியில் உள்ள இலங்கை தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து, நிராயுதபாணிகளாக உள்ள இலங்கை தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும் இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசு அமைதி பேச்சுவார்த்தைகளை தொடங்கிட வேண்டும் என்றும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் எத்தகைய துன்பங்களுக்கும் இனி ஆளாகவே கூடாது என்றும் கேட்டுக் கொண்டேன். பிரதமர் மன்மோகன் சிங் நான் உடனடியாக கவனிக்கிறேன், என்னை நம்புங்கள் என்று கூறினார்.

எச்சரிக்கை

நாம் நம்பிக்கை கொள்கின்ற அளவிற்கு 6-ம் தேதி மாலையே பிரதமர் இந்திய பாதுகாப்பு ஆலோசகரை அழைத்து, அவர் மூலமாக டெல்லியில் உள்ள இலங்கை நாட்டு தூதரை வரச்சொல்லி, அவரை எச்சரித்து இப்படி தமிழகத்திலே இருந்து அபயக்குரல் வந்திருக்கிறது. கண்டனக்குரல் வந்திருக்கின்றது. தமிழர்கள் தங்களுடைய கவலையைத் தெரிவித்திருக்கின்றார்கள். நீங்கள் எங்களுடைய கருத்தை அறிந்து ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் என்கின்ற அத்தகைய எச்சரிக்கையை இந்திய அரசு அவர்களுக்குச் செய்தது. அதுபற்றிய செய்தி அன்று மாலையிலேயே பத்திரிகைகளுக்கு மத்திய அரசினால் வழங்கப்பட்டது. பத்திரிகையில் வந்த செய்தி, “ராணுவ நடவடிக்கையின் காரணமாக நிராயுதபாணிகளான தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்து இந்திய நாட்டின் கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதற்காக இலங்கை நாட்டின் தூதுவர் இன்று மத்திய அரசால் அழைக்கப்பட்டார்.

இலங்கை நாட்டின் வடக்கு பகுதியில் ராணுவ நடவடிக்கைகள் பெருமளவிற்கு பரவி வருவதால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் இந்தியாவிற்கு பெரும் கவலையை அளித்துள்ளது. இலங்கை அரசு நிதானமான போக்கை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் சிறுபான்மையினராக உள்ள மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை பற்றியும் சுட்டிக் காட்டப்பட்டது.

Exit mobile version