
சம்பவத்தன்று ஆசிரியை இந்தி பாடம் எடுக்க, வகுப்பறைக்கு சென்று விட்ட பிறகு, பாடம் ஆரம்பிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன், மாணவனும் வகுப்பறைக்குச் சென்றுள்ளான். தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து, ஆசிரியையிடம் கோபமாக பேசியதோடு, கண் இமைக்கும் நேரத்தில், கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளான்.
ஆசிரியை உமா மகேஸ்வரியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து மாணவன் முகமது இர்பான் விளக்கம் அளித்துள்ளான்.
ஒரு புறத்தில் காப்ரட் கல்வி முறை எதிர்கால சந்ததிகளான மாணவர்களிடமிருந்து குறைந்த பட்ச மனிதாபிமானத்தையும் சமூக உணர்வையும் அழித்துவிட்டது. நவ தாராளவாதக் கல்வி முறையின் ஒரே நோக்கம் எவ்வளவு பணத்தை கற்று முடித்ததும் பெற்றுக்கொள்ளலாம் என்பதிலிருந்தே ஆரம்பமாகிறது. இவ்வாறு ஆரம்பிக்கப்படும் கல்வி சிந்தனை மேற்கு நாடுகளில் வன்முறைச் சமூகம் ஒன்றையே உருவாக்கியுள்ளது.
இந்த வன்முறைத் தலைமுறையை எதிர்க்கொள்ல மேற்கு நாடுகளில் இறுக்கமான சட்டங்கள் இயற்றப்படுகின்றனவே தவிர மாணவர்களை காப்ரெட் அடிமைகளாக உருவாக்குவதில் மிக உறுதியாக இருக்கின்றனர்.
கொலை செய்யப்படுவதற்கு முன், “அக்னி பாத்’ என்ற இந்திப் படத்தை, 30க்கும் மேற்பட்ட தடவை, மொபைலிலும், “சிடி’யிலும் பார்த்துள்ளான். அதில் வரும் கொலை காட்சியை கண்டு, ஆசிரியையின் மீதான வெறி அதிகமாகி, கொலை செய்யும் அளவுக்கு மாணவனை கொண்டு சென்றுள்ளது.
இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நவ தராளவாதக் கல்வி முறை பணத்தின் மீது பற்றுக்கொண்ட மிகப்பெரும் லும்பன் சமூகத்தை உருவாக்கியுள்ளது. இதனோடு இணைந்து சினிமா போன்ற சாதனங்கள் ஊடாக வன்முறை கற்பிக்கப்படுகின்றது. கல்வி முறையும் ஊடக- அரசியல் – வியாபார வன்முறையும் இணைந்து ஆபத்தான எதிர்கால சந்ததி ஒன்றை உருவாக்கிவருகிறது.
லண்டன் தெருக்களில் 15 வயதுக்கும் குறைந்த மாணவர்கள் சாரி சாரியாகக் கொள்ளச் சம்பவங்களில் ஈடுபட்டு சமூகக் கோபத்தை வெளிப்படுத்திய வேளையில் தாம் கொள்ளையடிப்பது நியாயமானது என வாதிட்டனர். இவ்வாறான கொள்ளைக்கு வித்திட்ட கல்வி சட்டரீதியாகக் கொள்ளையிட்டு பணம் பெற்றுக்கொள்வது எப்படி என்பதை கற்றுத் தருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் மனிதாபிமானத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் இவ்வகையான கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இப்போது அது அறுவடை செய்யப்படுகிறது. குஜராத் கொலையாளி நரேந்திர மோடி போன்றவர்களையும் நேரடியான காப்ரட் கொள்ளைக்காரர்கள் அம்பானி போன்றவர்களை கதாநாயகர்களகவும் கற்றுக்கொடுக்கும் இந்தக் கல்வி முறையின் பின்னால் ஒரு புதிய மாணவர் சமூகமே ஒளிந்திருக்கின்றது.