Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சென்னையில் நில நடுக்கம் – இலங்கை உட்பட 26 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

சென்னையில் இன்று மதியம் 2 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. நிலநடுக்கத்தால் போது மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்தோனேசியாவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ( ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது.) சென்னையிலும் உணரப்பட்டது. சென்னையைப் பொறுத்த வரையில் மந்தைவெளி , மைலாப்பூர், சாந்தோம், ஆழ்வார்ப்பேட்டை மற்றும் எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. சென்னை தா;லைமைச் செயலகத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர்.தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
தமிழகம் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தின் சில பகுதிகளிலும் இந்நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதன் கடந்த கால பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு இலங்கை உட்பட 26 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை, 28 நாடுகளில் சுனாமி குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version