Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சென்னையில் தொடரும் குண்டுவெடிப்பு அச்சுறுத்தல்:சந்தேகத்திற்குரிய பின்புலம்

சென்னை தனியார் வணிக வளாகத்திற்கு இன்று காலை விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

தகவல் அறிந்தவுடன் வணிக வளாகத்தில் போலீஸார் குவிந்தனர். உடனடியாக வணிக வளாகத்தில் இருந்து பொதுமக்களும், ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். வணிக வளாகம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதேபோல் கல்வி நிலையம் ஒன்றிலும், புறநகர் ரயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இவற்றையும் புரளி என காவல்துறை தரப்பு தெரிவித்தது.

பிரித்தானின்யா பிரன்ஸ் உட்பட உலகம் முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் அரசுகளதும் உளவுத்துறைகளதும் கைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 90 களில் பிரான்சில் இஸ்லாமிய பீதியை ஏற்படுத்தி நகரங்களை இராணுவ மயப்படுத்தவும், 2000ம் ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியாவில் இதே நோக்கங்களுக்காகவும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதம் இஸ்லாமியப் பயங்கரவாத்தை மிஞ்சியதாக முழு இந்தியாவையும் புற்றுநோய் போல அழித்துவரும் நிலையில் இக்குண்டுவெடிப்புக்களின் பின்புலம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

உலகின்  அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அரசுகளின் இராணுவமயமாக்கலே அச்சுறுத்தல் காப்ரட் கொள்ளையர்களால். மேலும் மேலும் வறுமைக்குள் தள்ளப்படும் மக்கள் போராட விளையும்  முன்னரேயே இராணுவ மயமாக்கலும் குண்டுப் புரளிகளும் ஆரம்பித்துவிடுகின்றன.

இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் வெறும் புரளி என மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “இது போன்ற வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வணிக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்” என்றார்.

சென்னை செண்ட்ரலில் நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழு வதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

சென்னை விமான நிலையம் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  சென்னை முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் தீவிர சோதனை செய்து வருகின்றனர். பிர பலமான ஆலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை செய்யப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்கள் முழுவதும் தீவிர சோதனை செய்யப்படுகிறது. பயணிகளின் உடமைகளையும் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள்.

ரெயில்வே தண்டவாளங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி, வள்ளியூர், நாங்குநேரி, இரணியல், குழித்துறை ரெயில் நிலையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். கன்னி யாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள லாட்ஜுகளில் அதிரடி சோதனை நடத்தி னார்கள். அங்கு சந்தேகப்படும்படியாக நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித் தனர்.

Exit mobile version