இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளுடன் வாழும் வகையில் தேவையான மாற்றங்களை அரசியலமைப்பில் செய்ய வேண்டுமென்று மத்திய அரசு இலங்கையை வற்புறுத்தி வருவதாக அகில இந்திய காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை தீவுக்கடலில் நேற்று மாலை நடைபெற்ற தமிழக முதல்வர் காருணாநிதி தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளுடனும் கண்ணியமாக தலைநிமிர்ந்து வாழும் வகையில் தேவையான மாற்றங்களை அரசியலமைப்பில் செய்ய வேண்டுமென்று மத்திய அரசு இலங்கையை வற்புறுத்தி வருகின்றது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் இந்தியா செய்யுமென்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசுடன் இணைந்து இந்திய அரசு நிகழ்த்திய இனப்படுகொலை குறித்தும் இப்போது நடைபெறும் இனச் சுத்திகரிப்புக் குறித்தும் சோனியா காந்தி கருத்துத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.