07.12.2008.
இலங்கையில் நடைபெற்று வரும் இன அநீதிகளை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் கவிஞர் இன்பா சுப்ரமணியம் தலைமையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்துகொண்டு கண்டன கவிதையை வாசித்தனர்.
இந்த கண்டன கவிதை போராட்டத்தில் கவிஞர் கனிமொழி, கவிஞர் தமிழச்சி, கவிஞர், சுகிர்தராணி,கவிஞர் இன்குலாப், கவிஞர் ஜெயபாலன், கவிஞர் லீலா மணிமேகலை உள்ளிட்ட பல முன்னணி கடைப்பாளிகள் கலந்து கொண்டு தங்கள் கவிதை மூலம் இலங்கை அரசிற்கு கண்டனத்தை தெரிவித்தார்கள்.
இந்த போராட்டம் குறித்து, பேசிய கவிஞர் லீலா மணிமேகலை, “இலங்கையில் நடைபெற்று இன அழித்தொழிப்பு நடவடிக்கையினை நிறுத்துவதற்காக முதலில் சமாதானத்திற்கான உரையாடலை தொடங்கவேண்டும். அதன் முன் அங்கு போர் நிறுத்ததம் ஏற்பட வேண்டும். நியாயமான அரசாக இலங்கை அரசு நடந்து கொள்ளாததால் அங்கு நிலவி வரும் இன பிரச்சினை உள்நாட்டு பிரச்சினை என்ற எல்லையை தாண்டி சர்வதேச பிரச்சினையாக மாறிவிட்டது என்றார்.