Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

செந்தூரனை நாடுகடத்தக் கூடாது : மத்திய அரசினதும் ஜெயலலிதா அரசினதும் முடிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றம்

senththuran_refugeeஇலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செந்தூரனை நாடு கடத்துவது குறித்து மத்திய அரசும் ஜெயலலிதா அரசும் எடுத்த முடிவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள செந்தூரனை நாடு கடத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு எடுத்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றில் செந்தூரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தூரனை நாடு கடத்துவது குறித்து எடுக்கப்பட்ட முடிவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர்.

இதேபோல் உயர்நீதிமன்றில் செந்தூரன் மற்றொரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இலங்கைக்கு என்னை நாடு கடத்துவது குறித்து தமிழக அரசு 3.7.2013 அன்று அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் செந்தூரன் மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் ராஜேஸ்வரன், ஆறுமுகசாமி ஆகியோர் கொண்ட அமர்வில் நடைபெற்றது. அப்போது, செந்தூரனை சொந்த நாட்டுக்கு திருப்ப அனுப்ப நீதிபதிகள் தடை விதித்தனர்.

மேலும், இது தொடர்பாக அரசுக்கு செந்தூரன் புது மனு ஒன்றை அனுப்பலாம். அரசு 8 வாரத்துக்குள் தனது முடிவினை அறிவிக்க வேண்டும். இலங்கைக்கு அனுப்பும் அவசியம் ஏற்பட்டால் செந்தூரனுக்கு அவகாசம் தர வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Exit mobile version