இருக்கின்ற மானிடரை இழிவு என்று சொல்லுவார்”
– இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர் பாடியது. இப்போதும் இந்தப் பாடல் வரிகளை சொல்லுமளவுக்கு சமூகம் இருக்கிறது என்பது அருவெறுப்பானது மட்டுமல்ல, வேதனையானதும்கூட.
நான் பணியாற்றும் அலுவலகத்தில் நான்கு பேரைத் தவிர பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். கடவுளின் பெயரில் நடந்துவரும் பிரச்சனைகளையும் கொடுஞ்செயல்களையும் அறிந்தால், அவை குறித்து எங்களுக்குள் அவ்வப்போது விவாதங்கள் நடைபெறும். அச்சமயங்களில் ஊர்தோறும் வைக்கப்பட்டுள்ள சாமிகளாலும், அமைக்கப்பட்டுள்ள கோயில்களாலும் நடந்துவரும் மோசடிகள் பற்றியும் மாயைகள் பற்றியும் புரியவைக்க எவ்வளவோ முயற்சித்தாலும் கடவுள் நம்பிக்கையாளர்கள் உண்மையை உணர மறுத்து வெறும் விவாதமாகவே பேசுவார்கள். இத்தகைய விவாதம் இன்று நேற்றல்ல – என் அலுவலகத்தில் மட்டுமல்ல – பல இடங்களில், நெடுங்காலமாக நடந்துவருகிறது. புரிந்துகொள்ளாமலே பேசும் கடவுளை நம்புகிறவர்களின் பேச்சில் ஒருவித வெறித்தனம் இருக்கும். இந்த வெறித்தனம்தான் பல தகராறுகளுக்கெல்லாம் மூலக்காரணம்.
கட்ந்த வாரத்தில் ஒரு நாள் மதிய உணவு உண்ணுகிறபோது, கடவுளென்ற மாயை குறித்து காரசாரமாக விவாதம் நடந்தது. பிறகு அன்றைய செய்தித்தாளை பார்த்தபோது, ஒரு நிழற்படம் கண்களை உறுத்தியது. மனதுக்கு நெருடலை தந்த அந்தப் படம், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள செட்டிப்புலம் கிராமத்தில் தலித்மக்கள் ஒரு கோயிலுக்குள் நுழைந்து வழிபட்ட சம்பவத்தில் எடுக்கப்பட்டது.
இல்லாத ஒரு பொருளை இருப்பதாக சொல்லி அதன் பெயரால் நடந்துவரும் அநியாயங்கள் ஏராளம். கடவுள் என்று சொல்லி கல்லை நேசிக்கும் பலர் மனிதர்களை நேசிப்பதில்லை. அதனால்தான் மனிதநேயமற்ற கொடுமைகள் நடந்து வருகின்றன. செட்டிப்புலம் கிராமத்தில் என்ன நடந்தது? யாரால் நடந்தது? இத்தகைய சம்பவங்களுக்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? என்பது குறித்து விவாதிக்கலாமென்று தோன்றியது.
செட்டிப்புலம் கிராமத்தில் வன்னியர்கள் 300 குடும்பங்களும், தலித்துகள் 115 குடும்பங்களும் வசிக்கின்றன. வன்னியர்களில் பெரும்பான்மையோர் தென்னந்தோப்புகளுடன்கூடிய நிலம் வைத்துள்ளனர். அவர்களின் நிலங்களில் தலித்துகள் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இங்கு கடைத்தெருவிலுள்ள சலூன் கடையில் தலித்துகளுக்கு முடிவெட்டுவதோ, முடி மழிப்பு செய்வதோ மறுக்கப்பட்டு வருகிறது. ஆதிக்க மனோபாவத்தை பார்த்து பழகிப் போன தலித்துகள் பக்கத்து ஊருக்கு சென்று முடிவெட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இப்படிப்பட்ட செட்டிப்புலம் கிராமத்தில் ஏகாம்பரேசுவரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் தலித் மக்கள் நுழைய ஆதிக்கச் சாதி இந்துக்களான வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அது குறித்து கேள்வியெழுப்பாமல் அதனை ஏற்றுக்கொண்டு தலித்துகள் வாழ்ந்து வந்தனர். இந்த கோயிலில் நுழைய மறுக்கப்படுவதை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் துணை அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஏகாம்பரேசுவரர் கோயிலில் தலித் மக்களுடன் நுழைய திட்டமிட்டது. அதன்படி, அக்டோபர் 14-ஆம் தேதி, சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் தலித்துகள் ஆலய பிரவேசம் செய்ய முயன்றனர். அதனை அறிந்த வன்னியர்கள் திரண்டு நின்று அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, ஆதிக்கச் சாதி கருத்தியலை விட்டுத் தர தயாராக இல்லாத வன்னியர்கள், காவல்துறை ஊர்தி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதலில் காவல்துறையினர் காயமடைந்ததால் தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கு பதற்றம் நிலவியதால் அன்று மாலை 3 மணிக்கு பிறகு வெறும் முன்னூறு குடும்பங்களில் வாழும் வன்னியர்களை அடக்க ஏராளமான அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டார். இக்கலவரம் தொடர்பாக காவல்துறையினர் 315 வன்னியர்கள் மீது வழக்குப் பதிந்து, தேடித்தேடி அலைந்து 31 பேரை மட்டுமே கைது செய்தனர்.
இந்நிலையில், கோயில் நுழைவு பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், அன்று 10 ஆயிரம் தலித்துகளுடன் ஆலயப் பிரவேசம் செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர். இதையடுத்து, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் அண்ணாதுரை (வன்னியர்) முன்னிலையில் அமைதிக் கூட்டம் நடந்தது. இதில், தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்று வழிபாடு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானத்தை செயல்படுத்த, அன்று இரவே கோயிலில் ஆயுதப்படை பிரிவு காவலர்கள் குவிக்கப்பட்டனர். கோட்டாசியர். இராஜேந்திரன்(ஆதிதிராவிடர்), வேதாரண்யம் வட்டாட்சியர் கருணாகரன்(ஆதிதிராவிடர்) ஆகியோர் வீடு, வீடாக சென்று தலித் மக்களை 4 வேன்களில் ஏற்றி அழைத்து கொண்டு சென்றனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் முனியநாதன்(ஆதிதிராவிடர்), மாவட்ட வருவாய் ஆய்வாளர் அண்ணாதுரை(வன்னியர்) ஆகியோர் கோயிலில் காத்திருந்தனர். பின்னர், வேன்களில் கொண்டு வரப்பட்ட தலித் ஆண்களும், பெண்களுமாக 70 பேர், மாவட்ட ஆட்சியர் முனியநாதன் தலைமையில் 11.45 மணிக்கு கோயிலுக்குள் சென்றனர்.
சிறப்பு பூஜைக்கு பிறகு தலித் மக்களுக்கு சுண்டல், சர்க்கரைப்பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. (இப்படிப்பட்ட சடங்கு நாடகத்தை நடத்திய ஆட்சியாளர்கள் அல்வா கொடுத்திருக்கலாம்)
செட்டிப்புலம் கோயிலுக்குள் தலித் மக்களை அழைத்து சென்ற நிகழ்வின் நிழற்படத்தை பத்திரிகைகளில் பார்த்தபோது, (மேலே இருக்கும் படத்தை நீங்களும் பாருங்கள்) பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் இந்த நிலையா என்று மனம் குமுறியது. மதத்தையும், சாதியையும் நிலைநிறுத்தி பிரச்சனைகளை உருவாக்கும் கடவுள் என்னும் கற்பிதம் தேவையா? என்று காலங்காலமாக முற்போக்குவாதிகள் கூறிவருகின்றனர். ஆயினும் சமூகத்தில் உள்ள பெரும்பான்மையோர் இன்னும் திருந்தியபாடில்லை. அதேசமயத்தில், இந்த கோயில் நுழைவு போராட்டம் தேவையா? என்று சிலருக்கு கேள்வியெழலாம். சாதியின் அடிப்படையில் விளைந்த அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அனைத்து இடங்களிலும் புழங்க உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்டுவது மிக அவசியம். ஆகவே, இதைப் பற்றி விவாதிப்பது நம் கடமை என்று தோன்றியது.
இல்லாத ஒரு பொருளை இறைவனென்று வழிபடும் பகுத்தறிவற்றவர்கள். தன்னைப் போலவே உடலும் சதையுமாக இருக்கிற சக மனிதனை சாதியின் அடிப்படையில் இழிவுபடுத்தி வருகிறார்கள். ”கோயிலுக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடும். இது கடவுளின் கட்டளை’’ என்று சொல்லி இந்தச் சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களை பொது விசேசங்களில் கலந்துகொள்ள விடாமல் ஒதுக்கிவைக்கிற வக்கிர புத்தியுள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லோரும் கடவுளை வழிபடுகிற காட்டுமிராண்டிகளாகவே இருக்கிறார்கள். இத்தகைய கேடுகெட்டத்தனத்தோடு இந்த உலகம் இருக்கிறதென்றால், அதைப் பார்த்துக் கொண்டு “கடவுள்’’ சும்மா கிடப்பது ஏன்? எல்லோருக்கும் நல்லது செய்து, கெட்டது செய்பவர்களை அழிப்பதுதான் கடவுளின் வேலையென்றால், ஆதிதிராவிடர் மக்களை கோயிலினுள் நுழையக்கூடாதென தடுக்கும் கெடுகெட்ட சாதிவெறியர்களை, அந்தக் கடவுள் அழிக்காதது ஏன்?
சக்தி – உலகை ஆள்பவன் – எல்லாம் தெரிந்தவன் என்று பொய்யுரைகளால் புகழப்படும் ”கடவுள்’’ இருக்கிறது என்று சொல்வது உண்மையாக இருக்குமானால், ஆதிதிராவிடர் மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் செட்டிப்புலம் ஆதிக்க சாதி இந்து வன்னியர்களின் முன் அந்தக் கடவுள் வந்து தட்டி கேட்டிருக்கலாமே? அது இருந்தால்தானே நியாயத்தை கேட்கும்!
காலம்காலமாக கடவுளின் பெய்ரால் ஒதுக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட தலித்து மக்களை, ”அரிஜன்ஸ் – கடவுளின் பிள்ளைகள்” என்று ஆதிக்கச் சாதி மனநோயாளி காந்தி குறிப்பிட்டார். அதன் வேறுபட்ட பாணியில், எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என்று சொல்லும் முட்டாள்கள் இந்த உலகத்தில் இப்போதும் நிறைந்திருக்கிறார்கள். தலித்துகளும் கடவுளின் பிள்ளைகள் என்றால், தமது பிள்ளைகளில் ஒரு பிரிவினரான வன்னியர்கள் இன்னொரு பிரிவினரான ஆதிதிராவிடர்களை வீட்டினுள் – கோயிலினுள் நுழைய விடாமல் தடுக்கும்போது, தந்தை கடவுள் இருந்தால் அது நேரில் வந்து, ஏண்டா எப்படி செய்யறீங்கன்னு கேட்டு திட்டி அடிக்க வேண்டாமா? அப்படி செய்யவில்லையெனில், அந்த ஆதிதிராவிட மக்கள் – கடவுளின் வப்பாட்டிக்கு பிறந்த பிள்ளைகளா? அவர்களுக்கு வீட்டினுள் நுழைய பங்கு உரிமை இல்லையா? இப்படி சாதி அடிப்படையில் உயர்வு – தாழ்வு – தீண்டாமை கற்பிக்கப்பட்ட இந்தச் சமூகத்தை மாற்ற முடியாத – கண்டுகொள்ளாத தேவடியாப்பையன் கடவுள் எங்கு இருக்கிறான்; எப்படி இருக்கிறான் என்பதை பக்தகோடிகள் சிந்தித்து பார்க்க வேண்டாமா?. இதையெல்லாம் செய்ய துப்பில்லாத கடவுள் இருப்பதாக நம்பி பேசிக்கொண்டிருக்கும் முட்டாள்களே, உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லையா? உங்கள் உடல் கூசவில்லையா?
உலகத்தில் ஓரறிவு உயிர், ஈரறிவு உயிர், ஐந்தறிவு உயிர், ஆறறிவு உயிர் என உயிர்கள் பல வகைகளில் பிறந்து வாழ்கின்றன. அவற்றில், ஆறாவது அறிவு இருப்பதாலேயே பகுத்தறிந்து உண்மைநிலையை உணரும் பக்குவம் மனிதனுக்கு இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனாலும், இல்லாத ஒரு பொருளை இருப்பதாக சொல்லி அதை கடவுளென்று பிதற்றிக்கொண்டு, சமூகத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் கேடு கெட்ட முட்டாள்களின் கூட்டம், பகுத்தறிந்து பார்க்க மறுப்பது ஏன்? காரணம், பகுத்தறிந்து பார்த்து உண்மையை உணர்ந்தால், பலரும் ஏமாற்றி பிழைக்க முடியாது.
மனிதன் சிந்திக்காத வகையில் அறிவை மழுங்கடிக்கும் முயற்சி பல மட்டங்களிலும் தொடர்கின்றன. தினமலர், குமுதம், தினகரன், சக்தி விகடன், கல்கி உள்ளிட்ட பல பத்திரிகைகள் பக்தி ஸ்பெசல் வெளியிடுகின்றன. அதேபோல், விஜய் தொலைக்காட்சி ”நடந்தது என்ன?” என்ற நிகழ்ச்சியில் சாமி விசயங்களை ஒளிபரப்பினால், புதியதாக வந்துள்ள ஜி தொலைக்காட்சி தனது பங்குக்கு “நம்பினால் நம்புங்கள்” (நம்பலனா சாமி கண்ண குத்திடுமா?) என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. சன் தொலைக்காட்சிக் குழுமத்தையும் ஜெயா தொலைக்காட்சி குழுமத்தையும் சொல்லாவே தேவையில்லை. சோதிடம், கோயில் தரிசனம், அருளாசி, இராமாயணம், மகாபாரதம்… என பல நிகழ்ச்சிகளில் பிற்போக்குத்தனக்களை மக்களின் மூளைக்குள் திணிக்கின்றன. பெரியாரின் பாசறையில் இருந்து வந்த கருணாநிதி இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரிரு ஊடகங்களை தவிர மற்றவை அனைத்தும் பிற்போக்குத்தனத்தையே கற்பிக்கின்றன. இதையெல்லாம் மாற்றவேண்டிய பொறுப்புள்ள பெரியாரின் பிள்ளைகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துக்கொண்டு சொத்துக்களை காப்பதற்காகவே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை நல்ல வழியில் செலுத்த வேண்டிய கடமையுள்ள தலைவர்கள், தனது தொண்டர்களுக்கு சாதிவெறியை தூண்டிவிடுவதை தொழிலாகவே கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கடந்து சிந்திக்கும் திறனுள்ள உயிரினமான மனிதர்கள், எண்ணங்களை அகல விரித்து அறிவுடன் சிந்தித்தால் உண்மை விளங்கும். பிரச்சனைகள் தீரும்.
பெரியாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிற இந்தக் காலக்கட்டத்திலும் தமிழ் நாடெங்கும் செட்டிப்புலம் போன்ற கிராமங்கள் ஏராளமாக கிடக்கின்றன. ஆதிக்கச் சாதி இனங்களில் பிறந்த பெரியாரிஸ்ட்களும், கம்யூனிஸ்ட்களும் சாதி ஒழிப்பை தமது உறவுகளிடம் பேசாமல், தலித்துகளிடம் பேசி வருவதால்தான் இந்த நிலை தொடர்கிறது. இந்தப் போலியான மனப்பான்மையை பெரியாரிஸ்டுகளும் கம்யூனிஸ்ட்களும் விட்டுவிட்டு, தம் சாதியை சேர்ந்தவர்களில் 10 பேரையாவது மாதந்தோறும் சாதியற்ற மனிதர்களாக உருவாக்க முயல வேண்டும். அதனை உறுதிமொழியாக ஏற்று செயல்பட முன்வரவில்லையெனில், முற்போக்கு அரிதாரம் பூசிக்கொண்டு, பிழைப்பு நடத்தும் தொழிலாகவே பெரியாரியத்தையும் பொதுவுடமை சித்தாந்ததையும் இவர்கள் காண்கிறார்கள் என்பதையே உங்கள் செயல்பாடுகளில் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும். தமிழ்த் தேசிய அரசியல் பேசிவரும் தலைவர்கள் சாதிவெறியை தூண்டும்படியும் பேசி வருகிறார்கள். சாதிகளோடு பிரிந்து கிடக்கும் பல இனங்களை ஒரே தமிழ்த் தேசத்தில் எப்படி அடைக்க முடியும்? இத்தகைய தலைவர்கள் அனைவரும், ”சாதி ஒழிப்பே, சமூக விடுதலை” என்ற சித்தாந்தத்தை ஆழமாக புரிந்துகொண்டு, தமது உறவுகளின் சாதிப்பற்று மனோபாவத்தை மாற்ற முன்வர வேண்டும். அதுதான் சமூகத்துக்கும் நல்லது. அவர்களுக்கும் நல்லது.
தலித்துகளின் அடிப்படை உரிமை பிரச்சனைகளை அறிந்து களைய வேண்டிய பொறுப்புள்ள தலித் இயக்கங்கள் “அம்பேத்கர் விருது’’ பெற்றுக்கொண்டும், தொகுதி பங்கீட்டில் ஓரிரு இடங்களை பெற்றுக்கொண்டும் மௌனித்து கிடப்பது வெட்கக்கேடானது.
நாகை மாவட்ட நிருவாகத்தில் இருக்கும் அதிகாரிகளின் பெயரை மேலே குறிப்பிடுகையில், அவர்களின் சாதியை அடைப்புக் குறியினுள் தந்திருக்கிறேன். சாதி கண்ணோட்டத்தில் அதிகாரிகளை பிரித்துப் பார்ப்பது என் நோக்கமல்ல. மாறாக, மாவட்ட ஆட்சியர் முதல் வட்டாட்சியர் வரை உள்ள நிருவாக அதிகாரிகளில் மாவட்ட வருவாய் அலுவலரைத் தவிர மற்றவர்கள் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்கள். ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த அதிகாரிகள் மிகுதியாக இருந்தும், காவல்துறையினரின் பாதுகாப்போடு கோயில் நுழைவு வெறும் சடங்காகவே நடந்து முடிந்திருக்கிறது என்றால், ஒரு மாவட்டத்தை ஆளும் அதிகாரம் தரும் படிப்பை படித்திருந்தாலும், தலித்துகள் சுயமாக எந்த முடிவையும் எடுக்கமுடியாதபடி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது அதிகார வர்க்கம். இந்த நிலைமையெல்லாம் பெரியாரின் வழித்தோன்றல்கள் ஆளும் மாநிலத்தில்தான். இதைவிட இந்த நாட்டின் கேடுகெட்டத்தனம் வேறு என்ன இருக்க முடியும்? முற்போக்கு – தமிழ்த்தேசிய – பொதுவுடமை அரசியல்வாதிகளுக்கும், கடவுள் இருப்பதாக சொல்லும் பக்தர்களுக்கும் கொஞ்சம்கூட வெட்கமில்லை.
தமிழக அரசியலில் இருந்து திராவிட மாயையை அகற்றுவதன் மூலமாகவே இப்போதுள்ள இந்தச் சமூகத்தை மாற்றுவதற்கான திட்டங்களை வகுக்க முடியும் என்ற கருத்தியலை மேலும் ஆழமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு வறட்டுத்தனமான தமிழ்த் தேசிய அரசியலையும், கம்யூனிச அரசியலையும் விவாதிக்க வேண்டும்.
– முருக சிவகுமார்
நன்றி : கீற்று http://keetru.com/