
உலகின் மிகப்பெரும் கொலைஞர்கள் மக்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசியெறிந்துவிட்டு முழு மிருகத்தையே உட்கொண்டுவிட்டு மனித இரத்தம் குடிக்கும் கோரத்தை தன்னார்வ தொண்டு என்கின்றனர். உலகின் மிகப்பெரும் கிரிமினல்களில் ஒருவரும், இலங்கை அரசின் உற்ற நண்பருமான கே.பி என்றழைக்கப்படும் பல்வேறு பெயர்களைக் கொண்ட கிரிமினல் செஞ்சோலைச் சிறுவர்களுடன் விடுமுறை நாளைக் கொண்டாடினார்.இப்போதும் இலங்கை அரசுடன் இணைந்து ஆயுதக்கடத்தல்களில் ஈடுபடுகிறாரா என்ற சந்தேகங்கள் பலரால் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் வட கொரியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்த ஆயுதங்கள் நிறைந்த விமானம் ஒன்று தாய்லாந்தில் இடை நிறுத்தபட்டமை இச்சந்தேகங்களை வலுப்படுத்தியது. தாய்லாந்திலும் இலங்கையின் மாறி மாறி வசிக்கும் கே.பி ஆட்கொல்லி ஆயுதக்கடத்தல் நடத்தியவர். வன்னிப் படுகொலையின் போது இலங்கை அரசின் உளவாளியாகச் செயற்பட்டு இறுதியில் இலங்கை அரசுடன் இணைந்துகொண்டதாகக் கருதப்படுபவர். கே.பி இன் கொலைக்கரம் குழந்தைகளை அரவணைக்கும் அவமானம் நடைபெறுகிறது.