Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

செஞ்சோலைக் குழந்தைகளின் மரணத்தை முனவைத்து லைக்கா-லிபாரா மோதலில் உணர்ச்சி வியாபாரம்

senjsoolaiநேற்று 14 ம் திகதி ஓகஸ்ட் மாதம் செஞ்சோலை என்ற சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் மீது இலங்கை அரசபடைகள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் 16 இற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட அனாதைக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற இக் கோரச் சம்பவத்தில் இலங்கை அரச படைகள் 61 பச்சிழம் குழந்தைகளை அழித்துவிட்டு பயங்கரவாதிகள் மாண்டு போயினர் என்று அறிக்கைவிட்டது. ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட ஏனை அனைத்து அமைப்புக்களும் கொலையுண்ட குழந்தைகள் விடுதலைப் புலிகள் அல்ல அனாதைக் குழந்தைகளே என்று உறுதிபடக் கூறின.

61 குழந்தைகள் கொல்லப்பட்டு 9 வருடங்கள் கடந்துவிட்டன. எதிர்காலம் குறித்த எந்தச் சிந்தனையுமற்று வெறுமனே உணர்ச்சி வியாபாரம் நடத்தும் தேசிய வியாபாரிகள் மரணித்த குழந்தைகளின் நினைவு நாளையும் லைக்கா – லிபாரா மோதலையும் தொடர்புபடுத்துகிறார்கள். இவர்களால் விடுதலைப் போராட்டத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு மனிதனும் திரும்பத் திரும்பக் கொல்லப்படுகிறான்.

இதில் மிகவும் அவமானகரமான நிகழ்வு என்னவென்றால் லைக்கா – லெபாரா என்ற பல்தேசிய வியாபாரிகளுக்கு இடையேயான மோதலிலும் கொல்லப்பட்ட குழந்தைகளின் மரண ஓலம் வந்துபோகிறது. லைக்கா என்ற நிறுவனம் இலங்கை அரசுடன் பல மில்லியன் டொலர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. லெபாரா இலங்கை அரசுடன் தொடர்புடையது. இந்த இரண்டு நிறுவனங்களிடையேயான மோதலில் புலம்பெயர் தமிழ்த் தேசிய அரசியல் சேடமிழுக்கிறது. கொல்லப்பட்ட குழந்தைகள் மீண்டும் வியாபாரிகளின் கைகளில் கொல்லப்படுகிறார்கள்.

Exit mobile version