61 குழந்தைகள் கொல்லப்பட்டு 9 வருடங்கள் கடந்துவிட்டன. எதிர்காலம் குறித்த எந்தச் சிந்தனையுமற்று வெறுமனே உணர்ச்சி வியாபாரம் நடத்தும் தேசிய வியாபாரிகள் மரணித்த குழந்தைகளின் நினைவு நாளையும் லைக்கா – லிபாரா மோதலையும் தொடர்புபடுத்துகிறார்கள். இவர்களால் விடுதலைப் போராட்டத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு மனிதனும் திரும்பத் திரும்பக் கொல்லப்படுகிறான்.
இதில் மிகவும் அவமானகரமான நிகழ்வு என்னவென்றால் லைக்கா – லெபாரா என்ற பல்தேசிய வியாபாரிகளுக்கு இடையேயான மோதலிலும் கொல்லப்பட்ட குழந்தைகளின் மரண ஓலம் வந்துபோகிறது. லைக்கா என்ற நிறுவனம் இலங்கை அரசுடன் பல மில்லியன் டொலர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. லெபாரா இலங்கை அரசுடன் தொடர்புடையது. இந்த இரண்டு நிறுவனங்களிடையேயான மோதலில் புலம்பெயர் தமிழ்த் தேசிய அரசியல் சேடமிழுக்கிறது. கொல்லப்பட்ட குழந்தைகள் மீண்டும் வியாபாரிகளின் கைகளில் கொல்லப்படுகிறார்கள்.