Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

செங்கல்பட்டு முகாமில் அகதிகள் மீது தமிழக போலீஸ் மிலேச்சத் தாக்குதல்- 13 ஈழ அதிகள் படுகாயம், சித்திரவதை : தமிழ் முரசு பொய்ச் செய்தி

இன்று அதிகாலை அந்தச் செய்தி தமிழக அரசியல் மட்டத்திலும், ஊடகவிலாளர்களிடையேயும் பரவியிருந்தது. செங்கப்பட்டு சிறப்பு முகாமிற்குள் நள்ளிரவும் நுழைந்த தமிழக போலீசார் காட்டுமிராண்டித்தனமாக அங்குள்ள கைதிகளைத் தாக்க அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும். கவலைக்கிடமான அவர்களை தமிழக காவல்துறையினர் தூக்கிச் சென்று விட்டனர் என்பதுதான் அந்தச் செய்தி ஆனால் இந்தச் செய்தியை செங்கல்பட்டு உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் கூட உறுதிப்படுத்த முடியாத அளவு மிகவும் ரகசியமாக தமிழக காவல்துறை இந்தக் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறது,. ஈழத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் அகதிகளில் சந்தேகத்திற்கிடமாக கருதுவோரை செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்குக் கொண்டு சென்றூ அடைத்து வைப்பது தமிழக அரசின் வழக்கம். புலிகள், புலிகள் என்று சந்தேகப்படுவோர் என சுமார் 31 பேரை எவ்வித விசாரணையும் இன்றி சிறப்பு முகாமில் அடைத்திருந்தார்கள். ஒன்றிலோ குற்றப்பத்திர்கை தாக்கல் செய்து வழக்கை நடத்துங்கள் அல்லது எங்களை விடுதலை செய்து ஏனைய அகதிகளைப் போல எங்களையும் வாழ அனுமதியுங்கள் என்பது அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள 31 ஈழ அகதிகளின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு முதலே அவர்கள் போராடிவருகிறார்கள். இந்நிலையில் நெற்று முதல் தங்களை விடுதலை செய்யக் கோரி அவர்கள் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர். தமிழக முதல்வர் கருணாநிதி திடீரென் ஈழ அகதிகள் மீது பாசம் கொண்டு பல சலுகைகளையும் அறிவிக்கும் போது தங்களின் கோரிக்கையும் கவனிக்கப்படும் என்று அவர்கள் நம்பியிருக்கக் கூடும். ஆனால் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது காவல்துறை நடத்தியுள்ள மிருகத் தனமான தாக்குதல் மட்டுமே தமிழக அரசு அவர்களுக்கு வழங்கியுள்ள பரிசு. தமிழக போலீசார் நிகழ்த்திய காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் எங்குள் வெளிவராமல் தமிழக ஊடகங்களுக்கு கடுமையான கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டில்

உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினர் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் குறைகளைத் தீர்ப்பதாக முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நேற்று அந்தக் கைதிகள் அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால் இரவு 10 மணிக்கு மேல் திடீரென 200க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளே புகுந்து உறங்கிக் கொண்டிருந்த அகதிகள் மீது மிகக்கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள 13 அகதிகளை மட்டும், அங்கிருந்து காவல்துறை அகற்றிவிட்டனர். அவர்கள் கதி என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை. முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, உண்ணாவிரதம் இருந்த அகதிகள் மீது நடத்திய தாக்குதல் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுப்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள கருணாநிதியின் குடும்ப ஊடகமான தினகரன் அகதிகள் போலீசாரைக் கடத்தி வைத்து மிரட்டியதாகவும். தற்காத்துக் கொள்ள அகதிகளை போலீசார் தாக்கியதாகவும். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 15 பேரை புழம் சிறையில் அடைத்திருப்பதாகவும் தினகரன் குழுமத்தின் தமிழ் முரசு பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version