Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த ஈழத் தமிழர்கள் 9 பேரும் கைது !

செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 9 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
9 பேரையும் நள்ளிரவில் கைது செய்த பொலிஸார் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்கள் 9 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று 25வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதம் இருந்தவர்களின் உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சிறப்பு முகாமில் இருந்து மாற்ற வேண்டும் என்றும், தங்களை விடுதலை செய்யும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நீடிக்கும் என அகதிகள் உறுதியாக தெரிவித்தனர். அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் உறுதியாக இருந்ததால் பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.
ஈழம் பெற்றுத் தருவதாக மக்களை ஏமற்றும் தமிழ் நாட்டு இனவாதிகள் தமது எல்லைக்குள்ளேயே அப்பாவி அகதிகளுக்கு அடிப்படை உரிமை மறுக்கப்படும் போது அறிக்கைகளோடு நிறுத்திக் கொள்கின்றனர்.

Exit mobile version