Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சூரிய மண்டலத்துக்கு வெளியே மிகவும் பிரகாசமான கோள் கண்டுபிடிப்பு.

எமது சூரிய மண்டலத்துக்கு வெளியே அதி பிரகாசமான கோளொன்றை கண்டு பிடித்துள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்புச் செய்துள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் பிரகாசமான இக்கோள் துலா நட்சத்திர தொகுதியில் அமைந்துள்ளது.

“கிளியஸ் 581′ நட்சத்திர சுற்றுவட்டப்பாதையில் அமைந்துள்ள இக்கோளானது பூமியை விட சுமார் இரு மடங்கு பெரிதாகும். சிலியின் லா சில்லாவிலுள்ள 3.6 மீற்றர் நீளமான தொலைக்காட்டி மூலமே இந்தக் கோள் அவதானிக்கப்பட்டது.

சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை கண்டறியப்பட்ட கோள்களிலேயே மிகவும் சிறிய கோள் இதுவென சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவா விண்வெளி அவதான நிலையத்தைச் சேர்ந்த மைக்கல் மேயர் தெரிவித்தார்.

Exit mobile version