Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சூப்பர் வல்லரசு’ மாயை தோற்றது!தாஸ்.

24.08.2008.
தெற்கு ஒசெட்டியா நாட்டுக்குள் ரஷ்யா படைகளைஅனுப்பி ஆக்கிரமித்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்க விரும்பிய அமெரிக்க ஜனாதிபதி புஷ்சும் அவருடைய அயல்துறை அமைச்சர் கண்டோலிசா ரைசும் ரஷ்யாவை ஒரு சர்வதேசக் குற்றவாளி என்று கூறியுள் ளார்கள். யார் யாரைப் பற்றி கூறுவது என்ற விவரம் இல்லாதவர்களைப் பற்றி என்ன கூறுவது என்று ஒரு அமெரிக்க குடிமகன் இணையதளத்தில் கூறியுள் ளது நியாயமான வார்த்தைகளே.

தெற்கு ஒசெட்டியா

சோவியத் யூனியன் இருந்த காலத் தில் அதனுள் இருந்த நாடு ஜார்ஜியா. சோவியத் யூனியனை பாதுகாக்க ஸ்டாலினை ஈன்றெடுத்த நாடு ஜார்ஜியா. 1991ல் சோவியத் யூனியன் சிதை யுண்டபோது ஜார்ஜியா தனியாகச் சென் றது. சோவியத் யூனியனில் ஜார்ஜியா மாநிலத்தில் இருந்த தெற்கு ஓசெட்டி யாவும், அப்காசியாவும் ஜார்ஜியாவுடன் இணைய மறுத்தன. அவை சுயாட்சி பெற்ற பகுதிகளாகத் தனியே நின்றன. வடக்கு ஒசெட்டியா ரஷ்யாவுடன் இணைந்துவிட்டது. தெற்கு ஒசெட்டியா விலும், அப்காசியாவிலும் உள்ள மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் அந்நாடு களில் உள்ள பழங்குடி இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜியா ஜனாதிபதி சாகஸ்விலி ஒரு அமெரிக்க ஆதரவாளர். ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆரஞ்சு புரட்சிகளில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர். அவருக்கு திடீரென்று ஒரு ஆசை ஏற்பட்டது. தெற்கு ஒசெட்டியாவை ராணுவ நடவடிக்கை மூலம் ஜார்ஜியாவு டன் இணைத்துக் கொள்ளவிரும்பினார். அதற்கு அமெரிக்காவும், நேடோ நாடு களும் பின்பலமாக பாதுகாப்பாக இருக் கும் என்று கருதி சாகஸ்விலி ஜார்ஜியா படைகளை தெற்கு ஒசெட்டியாவுக்குள் அனுப்பினார். ஏற்கெனவே அங்கு ஐ.நா. சமாதானப் படை அமைதியை நிலை நிறுத்தும் பணியைச் செய்துவந்தன. ஜார்ஜியாவின் நடவடிக்கைக்கு பதிலடி யாக ரஷ்யா படைகளை அனுப்பியது.

சாத்தானின் வேதம்

1990ல் குவெய்த் மீது இராக் படை யெடுத்து. அப்போது அமெரிக்கா படை களை வளைகுடாவுக்கு அனுப்பியது. இராக் தோற்கடிக்கப்பட்டது. 1991ல் சோவியத்யூனியன் சிதைந்தபின் அமெ ரிக்கா அகந்தையுடன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இறையாண்மை உடைய ஒருநாட்டின் எல்லையை மற்றொரு நாடு மீறுவதை அமெரிக்கா பொறுத்துக்கொள் ளாது என்று அறிவித்தது.

ஆனால் நடந்தது என்ன? 2001ல் தலிபான்களை அடக்குவதாகக் கூறிக் கொண்டு ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்கா இன்றுவரை அங்கு குடியி ருந்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்ட தனது கூட்டாளி பாகிஸ்தானின் எல் லைக்குள் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

சதாம் பேரழிவு ஆயுதங்கள் வைத் திருக்கிறார் என்று பொய் சொல்லி அமெரிக்கா இராக்கைத் தாக்கியது. இராக் அரசியலமைப்புச்சட்டப்படி தேர்ந்தெடுக் கப்பட்ட சதாம் உசேனை அமெரிக்கா பாக்தாத்தில் தூக்கிலிட்டது. இன்றுவரை அங்கு இருக்கவும் முடியாமல், வெளி யேறவும் முடியாமல் திணறிக் கொண் டிருக்கிறது.

அண்மையில் கொசாவா தனிநாடு கேட்டது. செர்பியாவிடம் இருந்து கொசாவாவைப் பிரிப்பதில் அமெரிக்கா அதீத ஆர்வம் காட்டியது ரஷ்யாவின் எதிர்ப் பையும் மீறி கொசாவா பிரிவதை அமெ ரிக்கா உறுதிப்படுத்தியது. இன்று ரைஸ் சொல்கிறார் இது 2008ம் ஆண்டு 1968 இல்லை என்று. சோவியத் யூனியன் வலு வுடன் இருந்த காலங்களில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த கம்யூனிச எதிர்ப்பு புரட்சியாளர்களை அடக்க ரஷ்யப் படைகள் சென்றதை இவ்வாறு சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அமெரிக்கா வின் கடந்தகால வரலாறுகளை அவர் மறந்துவிட்டார். வியட்நாம், கொரியா போர் களில் அமெரிக்காவின் பங்கை உல கறியும்.

மாயை மறைந்துவிட்டது

உலகின் சூப்பர் போலீசாகச் செயல் பட்டு வந்த அமெரிக்காவின் மாயத் தோற் றத்தை ஜார்ஜியாநிகழ்வுகள் சிதறடித்து விட்டன. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவை தார்மீகம் மற்றும் அரசி யல் அடிப்படையிலும் அமைந்துள்ளன. முதலாவதாக அமெரிக்காவின் நாடுக ளின் இறையாண்மை பாதுகாப்பு தத்து வம் நொறுங்கிப் போனது. அதனுடைய நட்பு நாடு கொலம்பியா, ஈகுவேடர் மீது படையெடுக்க அமெரிக்கா அனுமதித் தது. யுகோஸ்லேவியாவை அமெரிக்கப் படைகள் அடையாளமின்றி அழித்துவிட் டன. எனவே இறையாண்மை பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு களம் இறங்க அமெரிக்காவுக்கு அருகதை இல்லை என்றாகிவிட்டது.

இரண்டாவதாக அரசியல் யதார்த்தம். அமெரிக்கப் படைகள் இரண்டு இடங் களில் சிக்கிக் கொண்டு தடுமாறுகின் றன. இராக்குக்கும், ஆப்கனுக்கும் கூட் டாளிகள் கூடுதல் படைகளை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா கெஞ்சு கிறது. இதேசமயத்தில் பிரிட்டனும், ஆஸ்திரேலியாவும் தம்படைகளை திரும் பப்பெற நாள் குறித்துவருகின்றன. அமெ ரிக்காவின் அரசியல் கணக்கின்படி ரஷ் யாவை அதனால் பகைத்துக் கொள்ள முடியாது. அதனுடைய மதிப்பீட்டின்படி ஈரான் மற்றும் வடகொரியா விவகாரங் களில் ரஷ்யாவின் உதவி தேவைப் படுகிறது. எனவேதான் ஜார்ஜியாவுக்கு ஆதரவாக வார்த்தைகளோடு அமெரிக்கா நின்றுவிட்டது.

நேட்டோவின் செயலின்மை

வட அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உறுப்பினர்களாக உள்ள ஐரோப்பிய நாடுகளும் ஜார்ஜியாவுக்கு உதவ முன்வரவில்லை. மீண்டும் ஒரு பனிப்போர் காலத்தை உருவாக்க ஐரோப் பிய நாடுகள் விரும்பவில்லை. ஆப்கனில் உள்ள படைகளுக்கு தேவையானவற் றை கொண்டு செல்ல இந்நாடுகளுக்கு ரஷ்ய விமான நிலையங்கள் தேவைப் படுகின்றன. மேலும் ராணுவரீதியில் பதட்டமான சூழ்நிலையில் நீடித்திருக்க இவை விரும்பவில்லை. எனவேதான் சர்கோஸி அவசர அவசரமாக சமா தானப் பணியில் ஈடுபட்டார்.

சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை உயர்வு அதிகரித்து வரும் சூழலில் இயற்கை எரிவாயு ஏராளமாக அண்டிக் கிடக்கும் ரஷ்யாவைப் பகைத்துக் கொள்ள பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் விரும்பவில்லை. ஜார்ஜியா நிகழ்வில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளின் தீவிர ரஷ்ய எதிர்ப்பு நிலையை பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் எடுக்க விரும்பவில்லை.

சோவியத் யூனியனைவிட்டு விலகிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான அணியில் இணைய விரும்பின. அந்த அமைப்பு தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று அவை கருதின. அந்தப் பின்ன ணியில் ஜார்ஜியா உள்ளிட்ட பல முந் தைய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேடோ வில் சேர விரும்பின. அவைகளில் சில நேடோவுக்குள் அனுமதிக்கப்பட்டன. மற்ற நாடுகளுக்கு பாடம் கற்பிக்க விரும்பிய ரஷ்யாவுக்கு தேவையான வாய்ப்பை ஜார்ஜியா அளித்தது. ரஷ்யா வின் அரசியல் வியூகம் வென்றது. நேட் டோ அமைப்பால் விரும்பும் பாதுகாப்பு கிட்டாது என்று புலனாகிவிட்டது.

ஒற்றை துருவ உலகை அமைக்க விரும்பிய அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா தனது வலிமையை காட்டியுள்ளது. ஜார்ஜியா நிகழ்வுக்கு பதிலடியாக யாரா வது களம் இறங்கினால் அவர்களுக்கு, ராணுவ பொருளாதார, அரசியல் ரீதியாக எதிரடி கொடுக்கும் வல்லமை ரஷ்யா விடம் உள்ளது என்று ரஷ்ய அயல்துறை அமைச்சர் லாவ்ராவ் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் ஒரு துருவ உலகக் கனவு பலிக்கவில்லை. உலகம் ஒரு பல் துருவ அமைப்பாகவே இருக்க முடியும் என்று ஜார்ஜியா நிகழ்வுகள் நிரூபித் துள்ளன.

Exit mobile version