
கிளிநொச்சியில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடத்தில் குமரன் பத்மநாதன் இவ்வாறு குடியேறியுள்ளார்.
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டில் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்ததுடன், கட்டடடத்தின் ஒரு பகுதியை தனது அலுவலகமாகவும் தமிழ்;ச் செல்வன் பயன்படுத்தியிருந்தார். இந்தக் கட்டடத்தின் கூட்ட அறையில் சுமார் 175 – 200 பேர் வரையில் ஒன்றாக அமரக் கூடிய இட வசதி காணப்படுகின்றது.
வன்னி இனப்படுகொலைகளின் இறுதிக்கட்டத்தில் உலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு புலிகளின் தலைமையைக் காட்டிக்கொடுத்தவர் கே.பி என பரவலான கருத்து நிலவுகிறது. பிரபாகரனின் பெயரால் உலகம் முழுவதும் நடைபெறும் அரசியல் வியாபாரத்தில் கே.பி முன்னணியில் திகழ்கிறார்.