Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு இந்தியா – சீனா முயற்சி

பெய்ஜிங், ஜூன் 30-

இந்தியா – சீனா மேற்கொண்ட ஒப்பந்தங்களால் பெரும் மாற்றம் சமீபத்தில் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு முயற்சிமேற் கொண்டுள்ளன என்று சீனாவுக்கான இந்திய தூதர் நிரு பமா ராவ் கூறினார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 100 உறுப்பினர் கொண்ட இந்திய இளைஞர் குழு சென்றது. இந்த குழு விற்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் சீனாவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பொதுவான விவகாரங்களில் எங்க ளது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறோம். எதிர்காலத் தில் ஏற்பட வேண்டிய பொதுவான விஷயங்களில் இரு நாடுகளும் சமீபத்தில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளன. புதிய ஒப்பந்தத்தால் ஏற்பட்ட மாறு பாடுகள் மற்ற விஷயங்களிலும் பிரதிபலிப்பை ஏற்படுத் தும் என்றார்.

சீனா வந்துள்ள 100 உறுப்பினர் குழு இந்தியா – சீனா இளைஞர் திட்ட பரிமாற்ற நிகழ்ச்சியில் வந்துள்ள குழு வாகும். இந்த குழு இளைஞர் விவகாரத்துறை செயலாளர் எஸ்.கே.அரோரா தலைமையில் சீனா வந்துள்ளது. இரு நாட்டு இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நட்புணர்வை மேம்படுத்தும் என அரோரா கூறினார்.

Exit mobile version