இதே கருத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தெரிவித்திருந்தார். மேலும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.
இலங்கையில் சுய நிர்ணைய உரிமைக்கான சதி அரசியல் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நடத்தப்படுகிறது என்பதற்கான முன்னறிவிப்பே இக்கருத்துக்கள். அழகான மொழியில் அரச எதிர்ப்புப் போன்று வெளியிடப்படும் இந்த நச்சுக் கருத்துகள் குறித்து ஈழம் பிடித்துத்தருகிறோம் பேர்வளிகள் என்று கூறும் புலம்பெயர் மற்றும் இந்திய தேசியப் பிழைப்புவாதிகள் இதுவரை எதிர்கொள்ளவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் வாதங்களின் அடிப்படையில், பிரிவினைக்கு எதிரான இலங்கை அரசின் சட்டமூலத்தின் அடிப்படையில் கட்சி தடைசெய்யப்படலாம் என்பதாலேயே தாம் இவ்வாறு கருத்துத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.
இலங்கை அரசின் பிரிவினைக்கு எதிரான சட்டம் சொல்வது என்ன?
சட்டப் பிரிவி 157 A இன் அடிப்படையில்,
‘அரசியல் கட்சிகளோ, வேறு நிறுவனங்களோ அல்லது அமைப்புக்களோ இலங்கைக்குள்ளோ அல்லது வெளியிலோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கையின் எல்லைக்குள் தனியான அரசு அமைப்பதற்கு பிரச்சாரம் செய்வதோ, ஆதரவு வழங்குவதோ, நிதி வழங்குவதோ, ஊக்கமளிப்பதோ அன்றி நியாயப்படுத்துவதோ கூடாது’ என்று கூறப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்சியும் சுய நிர்ணைய உரிமையை நிராகரிப்பதற்கு இச்சட்டமூலமே காரணம் என்று கூறுகிறார்கள். விக்கி தேர்தலில் பிரச்சரம் மேற்கொள்ளும் போது மிகப் பிரதானமாக முன்வைத்த விடயமெ சட்டம் தொடர்பானதாகும் தனக்குச் சட்டம் தெரியும் என்றும் சட்ட அடிப்படையில் உரிமைகளை நிலை நாட்டுவேன் என்றும் விக்கி ஆட்சியைப் பிடித்தார்.
இலங்கையின் சட்ட அடிப்படையில் சுய நிர்ணைய உரிமை தடை செய்யப்படவில்லை. சர்வதேசச் சட்டங்களதும், ஐ,நாவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள சுய நிர்ணைய உரிமையை இலங்கையில் தடை செய்வது இயலாத ஒன்று. அதன் அடிப்படை இதுதான்: ஒரு தேசிய இனம் தான் விரும்பினால் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான உரிமை உண்டு. அவ்வாறான மக்களின் ஜனநாயக உரிமையைக் கோருவது இலங்கை அரசியல் சட்டத்தில் தடைசெய்யப்படவில்லை.
அவ்வாறு பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட்டால் அதுவே பெரும்பான்மைத் தேசிய இனத்தின் மீது சந்தேகங்களற்று இணைந்து வாழ்வதற்கான ஆதாரமாக அமையும்.
ஆக, நாம் பிரிவினை கோரவில்லை ஆனால் பிரிந்து செல்லும் உரிமையைக் கோருகிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வாதாடியிருக்க முடியும். அதுவும் சட்டம்படித்துக் கரைத்துக்குடித்த விக்கி போன்ற மலைகளை வைத்துக்கொண்டு இந்த வாதத்தை நீதிமன்றத்தில் கூட்டமைப்பு முன்வைத்திருக்கலாம். கூட்டமைப்பின் கொழும்பு உயர்குடிச் சட்ட மேதை சுமந்திரன் பாதிரிக்கு இது ஒன்றும் தெரியாததல்ல.
அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இலங்கையை ஆகிரமித்த இந்திய கொலைகருவியான இந்திய இராணுவத்தின் துணைப்படைத் தலைவராகச் செயற்பட்ட சுரேஷ் பிரமச்சந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துப் பிழைப்புவாதிகளும் மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை. சுட நிர்ணைய உரிமையை எதிர்ப்பதற்கு அவர்கள் ஒரு சமூதத்தை இந்திய மேற்கு மற்றும் இலங்கைப் பெரினவாத அரசுகளின் சார்பாகத் தாயார் செய்ய முனைகின்றனர்.
இரண்டாவதாக நாம் பிரிந்து செல்லவில்லை இணைந்து வாழவே விரும்புகிறோம் என்றும் அதற்கான ஆரம்பம் சிங்கள மக்கள் பிரிந்து செல்லும் உரிமையைத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு வழங்குவதற்காகக் குரல்கொடுக்க வேண்டும் என்று சிங்கள் மக்கள் மத்தியில் பிரச்சரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுவதும் கூட சாத்தியமான ஒன்றே. இன்று சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச பாசிசத்திற்கு எதிராக ஏற்பட்டிருக்கும் வெறுப்புணர்வைப் பயன்படுத்தி இப்பிரச்சாரத்தை மேற்கொள்வததற்கு இன்று பொருத்தமான நேரம் தோன்றியுள்ளது.
மக்களின் பிரதிநிதியாக அல்லாமல் இந்திய அரசினதும் மேற்கு ஏகாதிபத்தியங்களதும் பிரதிநிதியாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் நலன்களுக்காகவே செயற்படுகின்றது. இன்னும் சில வருடங்களில் வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள பௌத்தக் குடியேற்றங்கள் பாரம்பரிய நிலங்களை நிரப்பிவிட தமிழ்த் தேசிய இனம் என்ற ஒன்று இல்லை என்பதால் சுய நிர்ணைய உரிமை கேட்க முடியாது என்ற முடிவை தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசுடன் இணந்து அறிவிக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்பிற்கும் வாக்குப் பொறுக்கும் அரசியலுக்கும் எதிரான சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் இலங்கையின் இன்றைய பிரதான அரசியல் தேவை.