1980 ஆம் ஆண்டிலிருந்து குர்தீஷ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக PKK என்ற அமைப்பு போராடிவருகிறது. துருக்கியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 1984 ஆம் ஆண்டிலிருந்து குர்தீஷ் தொழிலாளர் கட்சி(PKK) துருக்கிக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கின்றது. நேட்டோ ஆக்கிரமிப்புப் படைகளுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்திவரும் துருக்கிப் படைகளுக்கும் PKK கெரில்லாபடைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு துருக்கிப் படையினர் கொல்லப்பட்டனர். ஈராக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து நடைபெற்ற இன்று 09.09.2012 நடைபெற்ற இத் தாக்குதலின் போது குர்திஷ்தான் போராளிகளுக்கு ஏற்பட்ட இழப்புக் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.