Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் காஷ்மீர் மக்கள் பாதுகாப்புப் படைகளுடன் மோதல்

kashmir_verdictபதின் நான்கு வருடங்களின் முன்னர் ஐந்து அப்பாவிகளைக் கஷ்மீரில் கொலைசெய்த காரணத்திற்காக இந்திட இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் சாட்சியங்கள் போதவில்லை என இந்திய அரசு அவர்களை விடுதலை செய்தது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர். இதனால் கொந்தளித்த காஷ்மீர் மக்கள் தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சுய நிர்ணைய உரிமை கோரி நீண்டநாள் போராட்டம் நடத்திவரும் கஷ்மீர் மக்கள் மீது இந்துத்துவ தத்துவத்தால் கட்டமைக்கப்பட்ட இந்திய அரசு தொடர்ச்சியாக இனச்சுத்திகரிப்பை நடத்திவருகிறது. இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள கஷ்மீரில் இந்திய அரசபடைகளின் கொலைவெறிக்கு எதிராக மக்கள் போராடிவருகின்றனர்.
தீர்ப்பிற்கு எதிராக நேற்று வெள்ளியன்று ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணி மற்றும் ஏனைய விடுதலை இயக்கங்கள் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுத்தன. கடைகள் மற்றும் வியாபார நிலையங்கள் மூடப்பட்டன. கஷ்மீர் தலைநகர் சிறீநகரில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றன. பலர் படுகாயமடைந்தனர் என அறிவிகப்பட்ட போதும் விபரங்கள் வெளியாகவில்லை.

அறுபது வருடங்களாக சுய நிர்ணய உரிமை கோரிப் போராடிவரும் கஷ்மீர் மாநிலத்தில் மக்களின் வாழ்க்கைத் தரம் ஏனைய பல மாநிலங்களோடு ஒப்பிடும் போது உயர் நிலையிலுள்ளது.

Exit mobile version