Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுயநிர்ணய உரிமைகோரிப் போராடும் கட்சியின் ஆதரவாளர்கள் நெதர்லாந்தில் கைது

குர்திஷ்தான் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் குர்தீஷ் தொழிலாளர்க் கட்சியின் (PKK) ஆதரவாளர்கள் என்று கருதப்படுவோர் நடத்திய கூட்டம் ஒன்றை சுற்றி வளைத்த நெதர்லாந்து போலிஸ் அங்கிருந்த 55 பேரைக் கைதுசெய்து விசாரணைக்காகச் சிறப்படுத்தியுள்ளது.1984 ஆம் ஆண்டிலிருந்து குர்தீஷ்தான் தொழிலார் கட்சி (PKK) போராடிவருகிறது.
துருக்கி அரசு தொடர்ச்சியான இனப்படுகொலையை குர்தீஷ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதற்கு எதிராக நாம் போராடுகிறோம்; வடக்கு ஈராக்கிலிருந்து பேசிய இன் பேச்சாளர் ரொஜ் வெலெட் இவ்வாறு குறிப்பிட்டார்.
துருக்கிய அரசு ஐரோப்பா எங்கும் பரந்துவாழும் குர்தீஷ் இன மக்களைப் பயங்கரவாதிகளாகப் பிரகடனப்படுத்துமாறு நீண்ட காலமாக ஐரோப்பிய அரசுகளைக் கோரிவந்தது. 2007 ஆம் ஆண்டு அமரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத தடைசெய்யப்பட்டது. தடையின் பின்னரும் PKK இன் ஆதரவு மற்றும் வெகுஜன முன்னணிகள் இயங்கிவந்தன.
PKK இன் செயற்பாடுகள் குர்தீஷ்தான் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத இந்த வருடம் வெற்றிகளைக் குவித்திருந்தது.
ஐரோப்பாவில் ஜனநாயக முற்போக்கு அமைப்புக்கள் மத்தியில் வெகுஜன ஆதரவைப் பெற்றிருந்த குர்திஷ் தொழிலாளர் கட்சியின் செயற்பாடுகளை முடக்குவதற்கான செயற்பாடுகளில் ஐரோப்பிய அரசுகள் இறங்கியிருப்தாகத் தெரிகிறது.
தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடுவதாகக் கூறும் கல் தோன்றி மண்தோன்றாக் காலத்து முந்தோன்றிய ஏகப் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டவர்களின் அரசியல் உரிமைக்காக் குரல்கொடுப்பார்களா?

Exit mobile version