இனப்படுகொலை இராணுவத்திற்கும் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தை நடத்துவதற்கும் என்ன தொடர்பு என்பது சுமந்திரனுக்கு தெரியாத ஒன்றல்ல. ஒரு நாட்டின் குறித்த பகுதியை இராணுவம் ஆக்கிரமிப்பதற்கு அங்கீகாரம் வழங்கும் சுமந்திரன், ஒரு நாட்டில் சிவில் நிர்வாகத்தை நடத்துவதற்கு இராணுவத்திற்கு அனுமதிவழங்கும் சுமந்திரன் உலக மக்களின் மீதான பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார். இந்த வகையில் காஷ்மிரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போராடும் மக்களுக்கும், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருக்கும் அமரிக்க நேட்டோ இராணுவத்திற்கு எதிராகப் போராடும் மக்களுக்கும், எண்ணை வளத்தைச் சுரண்டுவதற்காக மத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் இராணுவப்படைகளுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய சியோனிசப் படைகளுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கும் எதிரான சர்வதேச பயங்கரவாதியாகிறார் சுமந்திரன்.
இலங்கையின் வடகிழக்கை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்தை வெளியேறக் கோருவது மக்கள் பற்றுள்ள ஒவ்வொருவரதும் கடமையாகும்.
சம்பந்தரும் சுமந்திரனும் சர்வதேச அரச பயங்கரவாதிகள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கின்றனர். இந்த இருவருக்கும் வாக்குப் போட்டது சர்வதேச அரச பயங்கரவாதமா என்ன? இலங்கை அரசு கூட ஏற்றுக்கொள்ளாது என்று எதிர்வு கூறுகிறது சமபந்தர் குழு. இலங்கை அரசு இனச் சுத்திகரிப்பை நிறுத்துவதையும் ஏற்றுக்கொள்ளாது என்பதால் இனச்சுத்திகரிப்புக்கூட சம்பந்தரின் ஆசியோடு இனி நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
தொடர்புடைய பதிவுகள் :