அதேவேளை போர்க்குற்றவாளியும் இனப்படுகொலை இராணுவ நடவடிக்கைகளைத் தலைமைதாங்கி நடத்தியவருமான சரத் பொன்சேகா பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்பார் எனத் தெரியவருகிறது.
25 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில் சம்பிக்க ரணவக்க எரிசக்தி அமைச்சராக சம்பிக்க ரனவக்க பதவியேற்பார் எனத் அறிவிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வமாக இத் தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்பட்வில்லை எனினும் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது.
சுமந்திரன அமைச்சராவதற்கு முன்பதாக இலங்கையில் சிறைவைக்கபட்டுள்ள அரசியல் கைதிகள், காணமல் போனோர், கடத்தபட்டவர்கள், வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள், சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து அழிக்கப்படும் யாழ்ப்பாண நீர் மற்றும் நிலவளம் போன்றன தொடர்பான பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்குமாறு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பிந்திய தகவல்:
புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் பெயர்களுடன் வெளியான பட்டியலும் தான் அமைச்சராக முன்மொழியப்பட்டதும் தவறான தகவல்கள் என்று சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சரவையில் பங்கேற்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.