பாராளுமன்றம் ஐக்கிய தேசியக் கட்சி, மகிந்த அணி மற்றும் அதற்கு எதிரணி எனப் பிளவடைந்து எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலை தோன்றினால், சுமந்திரன் அணி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலை தோன்றும் என இலங்கைப் பாராளுமன்ற அரசியலோடு தொடர்புடையவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு சார் அரசியல்வாதியான சுமந்திரன் மேற்கு ஏகாதிபத்தியங்களின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளுள் முதன்மையானவர். சுமந்திரன் மற்றும் எரிக் சொல்கையிம் போன்றோர் பிரித்தானியாவில் உலகத் தமிழர் பேரவையுடன் திரைமறைவுப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினர். எரிக் சொல்கையிம் பிரான்சைத் தலைமையகமாக கொண்ட OECD என்ற தன்னார்வ நிறுவனம் ஒன்றைத் தலைமைதாங்கி நடத்திவருகிறார். இந்த நிறுவனத்திற்கு பிரதானமாக அமெரிக்க அரசு நிதி வழங்கி வருகிறது. 34 நாடுகளைப் பங்குதாரர்களாக கொண்ட இந்த நிறுவனத்திற்கு 22 வீதமான பணத்தை அமெரிக்க அரசு வழங்கிவருகிறது.
அதே வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் என்று உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதே வேளை சுமந்திரனோடு லண்டன் திரை மறைவுக் கூட்டத்தில் பங்குபற்றிய மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சிக்கான பிரச்சாரங்களை இலங்கையில் ஆரம்பித்துள்ளார்.
சுமந்திரன் முன்வைக்கும் இணக்க அரசியலுக்கு எதிரான பாராளுமன்றப் பாதையை நிராகரிக்கும் அரசியல் தலைமைகள் இலங்கையிலும் அதற்கு வெளியிலும் இல்லை.