Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுன்னாகம் பேரவலத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம்

chunnakam6சுன்னாகம் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அதி பார டீசல் கழிவுகள் 2 லட்சம் மக்களின் வாழ்க்கையைக் கேள்விகுறியாக்கியுள்ளது என்று கூறும் தூய நீருக்கான பாதிக்கபட்ட மக்கள் ஒன்றியம் நாளை இறுதிப் போராட்டம் ஒன்றை நடத்தப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போராட்டத்தில் இறுதி என்பது இல்லை; அது தொடர்ச்சியானது,எனினும் இன்றைய சூழலில் இப் போராட்டங்கள் அவசியமானவை; தூய நீருக்கான பாதிக்கபட்ட மக்கள் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கை:

ஊடக அறிக்கை:

1. வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் ஏற்பட்டிருக்கும் மாசடைதல் தொடர்பில் பல்வேறு குழப்பகரமான ஊகங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இதன்போது , வடக்கு மாகாண சபையால் வெளியிட்ட 40 கிணறுகளை கருத்தில் கொண்ட, ஆய்வுரீதியான பரிசோதனை முடிவுகள் மக்கள் மத்தியில் அதீத குழப்பத்தையும் தெளிவின்மையையும் ஏற்படுத்தியிருக்கிறது, இதன்போது மக்களால் எழுப்பப்பட்ட ஒரு சாதாரண கேள்வியான,” இந்த நீரைக் குடிக்கலாமா ? கூடாதா? ” என்ற கேள்விக்கு பொறுப்பானவர்களால் பதில் அளிக்கப்படவில்லை.

* ” இந்த நீரைக் குடிக்கலாமா ? கூடாதா? ” இந்த அடிப்படையானதும் எளிமையானதுமான கேள்விக்கான பதிலை வடக்கு மாகாண சபையின் நீருக்கான விஷேட செயலணியின் தலைமை வழங்கவேண்டும் . தலைமை பதிலளிக்கதவிடத்து கௌரவ முதலமைச்சர் ,அல்லது கௌரவ ஆளுநர் , அல்லது அரசாங்க அதிபர் ஆகியோர் இதற்கான பதிலை பெற்று மக்களை தெளிவுபடுத்தவேண்டும்.

2. இந்த மாசடைதல் தொடர்பில் என்ன நடகின்றது என்பதில் பொதுமக்களாகிய நாம் தெளிவின்றி இருக்கிறோம் . ஆகவே மக்களின் நம்பிக்கையையும் காத்திருப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு, ” வாரா வாரம் இந்த மாசடைதல் தொடர்பில் எந்த விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன, என்றும் – மற்றும் எந்த எந்த இடங்களில் இருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது . ” போன்ற தரவுகள் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் .மேலும் குடிநீர் வழங்கல் மற்றும் புதிய நீர்த்தாங்கிகள் வழங்கல் என்பன முறையான ரீதியில் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

3. இந்த மாசடைதலின் போது மக்களாகிய நாம் பல்வேறு தரப்புக்களையும் உதவிக்காக அணுகினோம், எமது குரலை வெளிப்படுத்தகோரினோம், ஆனால் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகள்கூட கிடைக்கவில்லை .ஆகவே விசேட செயலணியின் தலைமையை, சக்தியும் ஆளுமையும் வாய்ந்த தலைமைகள் பொறுப்பேற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதனால் விசேட செயலணியின் நிரந்தர தீர்வை நோக்கிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை கௌரவ முதலமைச்சர் , கௌரவ ஆளுநர் ,மற்றும் அரசாங்க அதிபரின் கூட்டுத்தலைமை மற்றும் கூட்டுப்பொறுப்பின் கீழ்மேற்பார்வை செய்யப்படவேண்டும். அதுவே செயல்திறன் மிக்க அணியாக இருக்கும் என்பது மக்களின் கருத்து .

மேற்குறித்த அம்சங்களை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவினை தெரிவித்து, ஒரு மாபெரும் பேரணி வருகின்ற 07.05.2015 செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து கோயில் வழியாகச் சென்று முதலமைச்சர், ஆளுநர், அரசாங்க அதிபர் மற்றும் உலக சுகாதார ஸ்தாபன பிரதிநிதி ஆகியோருக்கு மனுவை கையளிக்கும் . இது ஒரு கடைசி போராட்டமாக இருக்கும், இதன்போது மாணவர்களும் பொதுமக்களும் ” நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்” என்ற கோஷத்துடன் இணைக்கப்படுவர் .

எமது உயிருக்கு இணையான நண்பர்களே, நாம் பொறுமையை இழந்துவிட்டோம் .நாம் நமது வாழ்வாதார பிரச்சினை பற்றி பேசப்போகிறோம், தமது இயற்கைக்காகவும் தமது எதிர்கால சந்ததிக்காகவும் தமது வாழ்நாளின் ஒரு நாளை கொடுக்க தயாராகும் ஒவ்வொரு மனிதidயும் நாங்கள் நல்லூரின் முன்றலில் சந்திக்க விரும்புகிறோம் .

முற்று முழுதான அரசியல் கலப்பற்ற பேரணியாக இது அமையும், எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் பிரமுகரோ இந்த போராட்டத்தில் பங்குபற்றமுடியாது.

சுருக்கமாகச்சொன்னால் இது மக்களினதும் மாணவர்களினதும் போராட்டம், அரசியல்வாதிகளுக்கு தடை . இதன் போது பல்வேறு மாணவர் அமைப்புக்களும் பொது அமைப்புக்களும் கலந்து கொள்ளவுள்ளன . இன – மத – பேதமற்ற ஒரு பேரணியாகவும் இது அமையும் , நீருக்காகவும் எமது எதிர்காலதிற்காகவும் ஒன்று திரள்வோம் இவ்வண்ணம், தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையம் விதை குழுமம்.

No dangerous pollutants in Jaffna water – MTD Walkers PLC
MTD Walkers optimistic further investigations will vindicate baseless accusations
சுன்னாகம் பேரழிவு:ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குத் தடைவிதித்த கூட்டமைப்பின் மாகாண அரசு
சுன்னாகம் அழிவைத் தலைமை தாங்கியது நானே :சம்பிக்க ஒப்புதல் வாக்குமூலம்
கல்லோயாவிலிருந்து வெலிவேரிய ஈறாக சுன்னாகம் வரை
சுன்னாகத்திலிருந்து குடாநாட்டை அழித்தவர் சிறீலங்கன் ஏயர் லைன்ஸ் இன் இயக்குனரானார்
சுன்னாகத்தில் வாழ்ந்தவர்களின் நரம்பு மண்டலம் பாதிப்படையலாம்: சம்பிக்கவும் தேவாவும் பொறுப்பு
யாழ்ப்பாண மக்களின் உயிர்குடிக்கும் பல்தேசிய நிறுவனம் அச்சத்தில் அறிக்கை
யாழ் குடாநாட்டின் நீரையும் நிலத்தையும் அழிப்பதற்கு கூட்டமைப்பும் துணை போகிறது
குடாநாட்டை அழிக்கும் மின்நிலையத்தில் ஆய்வு நடத்தி காலம் கடத்தப்படுகிறது
சுன்னாகத்தில் அழிப்பு தொடர்கிறது:துணைக்குழுக்களும் NGO உம் தலையீடு
இனவழிப்பிற்கு எதிராக முழங்கிய பறை
சுன்னாகம் நீரை நஞ்சாக்கிய கிரிமினல் நிறுவனத்தின் மோசடி அம்பலம்

Exit mobile version