Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுன்னாகம் நீர் தொடர்பாக விக்னேஸ்வரனைச் சந்திக்க முற்பட்டு தோல்விகண்ட மருத்துவர்கள்

vikneswaranசுன்னாகம் நீரையும் நிலத்தையும் நாசப்படுத்திய எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தை பாதுகாக்கும் வகையில் நடந்துகொள்ளும் வட மாகாணசபை முதலமைச்சரை யாழ்.மருத்துவர் சங்கம் சந்திக்க முற்பட்டுத் தோல்வியடைந்துள்ளது. அது தொடர்பாக சங்கம் விடுத்துள்ள அறிக்கை:
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு குறித்து வடக்கு மாகாண முதலமைச்சரை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாட சந்தர்ப்பம் கேட்டோம் ஆனால் அவர் நீண்ட நாள்களாகியும் பதில் தரவில்லை என யாழ் மருத்துவ சங்கத்தின் தலைவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார்.
சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலந்துள்ளமை சம்பந்தமான ஆவணப்பட இறுவட்டு வெளியிடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்புரையாற்றும் போதே மருத்துவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது, வலிகாமத்தில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பது சம்பந்தமாக நாம் பல்வேறு தரப்பினரதும் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தோம். இதுகுறித்து வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் அறிவித்தோம். அத்துடன் அவரை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடவும் நேரம் கேட்டு கடிதம் எழுதியிருந்தோம்.

நாம் கடிதம் அனுப்பி பல மாதங்கள் கடந்த நிலையிலும் அவர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி நேரம் ஒதுக்குவதாக முதலமைச்சரின் செயலாளர் எமக்கு அறிவித்தார்.

ஆனால் நாம் இந்திய பிரதமர் வரும் நிலையில் இது சாத்தியப்படுமா என்று கேள்வி எழுப்பிய போது, அது சாத்தியப்படும் என செயலாளர் தொவித்தார். இறுதி நிமிடத்தில் அந்தச் சந்திப்பையும் ரத்து செய்தனர். நாம் இன்றுவரை இந்தக் கலந்துரையாடலுக்கான நேரம் ஒதுக்கி தரப்படும் என எதிர்பார்த்து இருக்கின்றோம் என தெரிவித்தார்.

Exit mobile version