எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனம் பலருக்குப் பணத்தை வழங்கி வழக்கைத் திசைதிருப்பி மீண்டும் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு முயற்சிப்பதாக தகவல்கள் சில ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாண அரச அதிபராகவிருந்த அருமைநாயகம் என்பவர் 1987 ஆம் ஆண்டிலிருந்தே சுன்னாகத்தில் எண்ணைக் கசிவு காணப்படுவதாகவும் அதற்கும் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்திற்கும் தொடர்ப்பில்லை என்ற தொனியில் கருத்துத் தெரிவித்திருந்தார். எம்ரிடி வோக்கஸ் இன் பணப்பட்டுவாடா இவருக்கும் வழங்கப்பட்டதா என்ற சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அதே வேளை கடந்த காலத்தில் இலங்கை அரசிடமும் இலங்கை அரசோடு தொடர்புடைய நிறுவனங்களிடமும் பணம் பெற்றுக்கொண்டு காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இணையங்களும் எம்.ரி.டி வோக்கஸ் இன் வலையமைப்பில் உள்ளனவா என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன.
சுன்னாகத்தில் நடைபெற்ற அழிப்புத் தொடர்பாக தவறான பரபப்புச் செய்திகளை வெளியிடும் இணையங்கள் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றன.
எம்.ரி.டி வோக்கஸ் இன் குற்றச் செயல்கள் நிறுவப்பட்டால் அதன் இயக்குனர்கள் கிரிமினல் குற்றங்களுக்கு உள்ளாக்கப்படலாம்.
நச்சுக் கழிவுகளை அதிக அளவில் வெளியேற்றியமைக்காக இத்தாலியரான ஆன்ரியோ கியாக்கபோனைத் இன்டர்போல் தேடிவருகிறது. சுன்னகத்தில் அழிப்பை நடத்திய நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு எதிராக இதேவகையான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும். இதனாலேயே போலிகள் இன்று களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
எம்.ரி.டி வோக்கஸ் இன் இயக்குனர்களில் ஒருவரான நிர்ஜ் தேவா, பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் இலங்கையர். ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினரும், ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினருமான நிர்ஜ் தேவாவிற்கு எதிரான மனுவொன்றை பறை-விடுதலைக்கான குரல் என்ற அமைப்பு ஏற்கனவே ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் லண்டன் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தது.
சுன்னாகத்தில் நிறுவனம் மூடப்படுவதும், அழிப்பு நிறுத்தப்படுவதும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் அவசியமானது. இவற்றைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாத பரபரப்பு வியாபாரிகள் மற்றொரு பேரழிவின் அவலத்திலும் பணம் தேடிக்கொள்ள முற்படுகின்றனர்.