மலேசிய நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் இன் உப நிறுவனமான நோதேர்ன் பவர் என்ற நிறுவனம் இலங்கை அரசின் அங்கீகாரத்தோடும் அனுசரணையோடும் உற்பத்தி செய்த மின்சாரக் கழிவுகள் மக்கள் குடியிருப்புக்களில் வெளியேற்றப்பட்டதால் வடபகுதியில் ஒரு பகுதி மக்களின் உயிர் வாழும் உரிமை இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனமும் அதன் பின்னணியில் செயற்பட்டவர்களும் இப் பேரழிவிற்குப் பொறுப்பெடுக்க வேண்டும்.
மனிதர்களுக்கு நேரடியாகப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சூழல் சார்ந்த குற்றச் செயலில் ஈடுபட்ட பலரை இன்டர்போல் நிறுவனம் குற்றவாளிகள் பட்டியலில் வகைப்படுத்தித் தேடி வருகிறது. அந்த வகையில் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் பின்னணியில் செயற்பட்ட அதன் இயக்குனர்கள், இலங்கை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோர் தேடப்படும் குற்றவாளிகளாக்கப்பட வேண்டும்.
பிரித்தானியாவில் வாழும் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் இயக்குனரும் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினருமான நிர்ஜ் தேவா என்பவர் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர். நிர்ஜ் தேவாவைத் தண்டிகக் கோரியும் சுன்னாகத்தில் அதிபார கழிவு டீசலைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் முறையை நிறுத்தக் கோரியும் பறை – விடுதலைக்கான குரல் என்ற அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
வரலாற்றில் முதல்தடவையாக சூழலை மசுபடுத்தியவர்களைத் தேடும் இன்டட்போல்: தேவா வெளியில்