Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுன்னாகத்தில் அழிப்பு தொடர்கிறது:துணைக்குழுக்களும் NGO உம் தலையீடு

poisonசுன்னாகம் அனல் மின் நிலையம் இன்னு மூடப்படவில்லை இன்று கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. யாழ் குடா நாட்டின் ஒரு பகுதியை அழித்துச் சிதைத்துவரும் சுன்னாகம் அனல் மின் நிலையத்தை மூடுவதற்கு இலங்கையின் மின் வலுத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு தற்காலிகமான கண்துடைப்பே என்பது இப்போது தெரியவந்துள்ளது.

பேரினவாதியும் பௌத்த அடிப்படைவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க பல வருடங்களாக அனல் மின் நிலையத்தினூடாக நடத்தப்படும் திட்டமிட்ட அழிப்பின் பின்னணியில் செயற்பட்டவர் என்பது அறிந்ததே.

அழிவிற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வளர்ந்து வரும் நிலையில் அவற்றைச் சிதைக்கும் வகையில் தன்னார்வ நிறுவனங்கள் (NGO) களமிறங்கியுள்ளன. நீரும் நிலமும் அழிக்கப்படுவதற்கு எதிராகப் போராட வேண்டாம் என்றும் தாம் குழாய் கிணறுகளை அமைத்துத் தருவதாகவும் ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் தமது சதி வேலையை ஆரம்பித்துள்ளன.

அதே வேளை மகிந்த ராஜபக்ச அரசின் கீழ் பல்வேறு கிரிமினல் வேலைகளை மேற்கொண்ட சிறீ ரெலோ என்ற துணை இராணுவக் குழுவும் சுன்னாகத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளமை உள் நோக்கங்களைக் கொண்டது.

தன்னார்வ நிறுவனங்கள், துணை இராணுவக் குழுக்கள் போன்றவற்றின் தலையீட்டுக்கு அப்பால் இதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பறை-விடுதலைக்கான குரல் அமைப்புத் தெரிவித்துள்ளது.

சுன்னாகம் அழிவைத் தலைமை தாங்கியது நானே :சம்பிக்க ஒப்புதல் வாக்குமூலம்

சுன்னாகம் அனல் மின் நிலையத்தை மூடுமாறு போராட்டம்

கல்லோயாவிலிருந்து வெலிவேரிய ஈறாக சுன்னாகம் வரை

இனவழிப்பிற்கு எதிராக முழங்கிய பறை

நமது மண்ணையும் மக்களையும் அழிவிலிருந்து பாதுக்காக உதவுவோம்: ஆர்பாட்டத்திற்கு அழைப்பு

தண்ணீர் கேட்டவர்கள் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர் : புலம்பெயர் தமிழர்களுக்குச் சவால்

திட்டமிட்டு அழிக்கப்படும் யாழ்ப்பாணம்: நீர் நஞ்சாக்கப்படுகின்றது
Exit mobile version