பேரினவாதியும் பௌத்த அடிப்படைவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க பல வருடங்களாக அனல் மின் நிலையத்தினூடாக நடத்தப்படும் திட்டமிட்ட அழிப்பின் பின்னணியில் செயற்பட்டவர் என்பது அறிந்ததே.
அழிவிற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வளர்ந்து வரும் நிலையில் அவற்றைச் சிதைக்கும் வகையில் தன்னார்வ நிறுவனங்கள் (NGO) களமிறங்கியுள்ளன. நீரும் நிலமும் அழிக்கப்படுவதற்கு எதிராகப் போராட வேண்டாம் என்றும் தாம் குழாய் கிணறுகளை அமைத்துத் தருவதாகவும் ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் தமது சதி வேலையை ஆரம்பித்துள்ளன.
அதே வேளை மகிந்த ராஜபக்ச அரசின் கீழ் பல்வேறு கிரிமினல் வேலைகளை மேற்கொண்ட சிறீ ரெலோ என்ற துணை இராணுவக் குழுவும் சுன்னாகத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளமை உள் நோக்கங்களைக் கொண்டது.
தன்னார்வ நிறுவனங்கள், துணை இராணுவக் குழுக்கள் போன்றவற்றின் தலையீட்டுக்கு அப்பால் இதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பறை-விடுதலைக்கான குரல் அமைப்புத் தெரிவித்துள்ளது.