Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுன்னாகத்திலிருந்து குடாநாட்டை அழித்தவர் சிறீலங்கன் ஏயர் லைன்ஸ் இன் இயக்குனரானார்

sl_airline_editedசுன்னாகம் அனல் மின்னிலையத்தைச் சட்டவிரோதமாக இயக்கி யாழ்ப்பாணக் குடா நாட்டில் பேரழிவுகள் ஏற்படக் காரணமாகவிருந்த ரனில் விக்ரமசிங்கவின் நண்பர் நிரஜ் தேவா என்ற நிரஞ்சன் தேவா இன்று சிறீலங்கன் ஏயலைன்ஸ் இன் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நீண்டகால உறுப்பினரான நிர்ஜ் தேவா, கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினருமாவார்.

கடந்த வருடம் சுன்னாகத்தில் ஏற்பட்டடுத்தப்பட்டது போன்ற அழிவுகளை வேறு நாடுகளில் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக இன்டர்போல் போலிஸ் பிடியாணை பிறப்பித்திருந்தது. பிரித்தானியாவில் அரசியல் பிரமுகராக வாழும் நிர்ஜ் தேவா பல்வேறு மனித உயிர்களின் வாழ்வை சுன்னாகம் மின் நிலையத்தைச் சட்டவிரோதமக நடத்தி அழிக்கச் சூத்திரதாரியாகவிருந்தார்.

ஒரு பிரதேசத்தின் நீர் மற்றும் நில வளங்களைச் சூறையாடுவதற்குப் பின்னணியில் செயற்பட்டுள்ளார். இதன் அடிப்படையில் நிர்ஜ் தேவாவை மீது நடவடிக்கை எடுக்குமாறு ‘பறை-விடுதலைக்கான குரல்’ என்ற அமைப்பு போராட்டங்களை நடத்தியது.

மைத்திரிபால சிரிசேன என்ற சோளக்காட்டுப் பொம்மையை வைத்து ரனிலும் ஏகாதிபத்தியங்களும் நடத்தும் ஆட்சியில் நிர்ஜ் தேவாவின் பங்கு முக்கியமானது.

யாழ்ப்பாணத்தில் அனல் மின் நிலையத்தை நடத்தும் நோதேர்ன்பவர் என்ற நிறுவனம் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது. எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் நிர்ஜ் தேவாவும் ஒருவர்.

ரனில் விக்ரமசிங்கவின் பால்ய நண்பரான அஜித் டயஸ் விமான சேவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய நண்பர் குழாம்கள் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிரஞ்சன் தேவா என்ற பிரித்தானிய நண்பரும் ஒருவர்.

2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரனின் பிரித்தானியாவிற்குச் சென்ற வேளையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக அமெரிக்க எம்.ஐ.ரி பல்கலைக் கழகத்தில் வழங்கப்பட்ட பயிற்சியை நிறைவு செய்திருந்தார். பிரித்தானியாவிற்கு அவர் பயணம் செய்த போதே ஆட்சி மாற்றத்திற்கான ஆலோசனை நடத்தப்பட்டது.

சிங்கள மக்கள் மத்தியிலும் கட்சியிலும் செல்வாக்கற்ற ரனில் மைத்திரிபால என்ற பொம்மை ஊடாக ஆட்சியைக் கையகப்படுத்துவதற்கான ஆலோசனை பிரித்தானியாவிலேயே நடத்தப்பட்டது எனலாம். பிரித்தானியா சென்ற ரனில் அங்கு நிர்ஜ் தேவாவுடன் பல நிகழ்சிகளில் கலந்துகொண்ட நிழல் படங்கள் வெளியாகின.

ஆக, சுன்னாகம் அழிப்பின் பின்னணியில் இலங்கையின் இன்றைய அரசின் மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்க மட்டுமன்றி ரனில் விக்ரமசிங்கவும் செயற்பட்டதற்கான ஆதாரங்களே இவை.

பேரினவாதத்தைத் தூண்டும் வகையிலும், ராஜபக்ச குடும்பத்தைப் பாதுகாக்கும் வகையிலும் செயற்படும் ரனில் விக்ரமசிங்க ஆட்சியில் சுன்னாகம் அழிவுகளுக்கு நீதியை எதிர்பார்க முடியாது.

பிரித்தானியப் பிரசையாகவும் அதே வேளை பிரித்தானிய மக்களின் பிரதிநிதியாகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு சர்வதேசக் குற்றச்செயல்களில் ஈடுபடும் நிர்ஜ் தேவா போன்றவர்களோடு இணைந்து இலங்கைப் பேரினவாத அரசு நடத்தும் அழிப்பு அணு சக்திவரை நீள ஆரம்பித்துள்ளது.

முன்னையவை:

ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்காவில் ரனில் பயிற்றப்பட்டதற்கான ஆதாரம்
சுன்னாகம் பேரழிவு: நிர்ஜ் தேவாவின் புறமுதுகும், வடமாகாண சபைத் தீர்மானமும்
சுன்னாகம் அழிவைத் தலைமை தாங்கியது நானே :சம்பிக்க ஒப்புதல் வாக்குமூலம்
சுன்னாகம் அனல் மின் நிலையத்தை மூடுமாறு போராட்டம்
கல்லோயாவிலிருந்து வெலிவேரிய ஈறாக சுன்னாகம் வரை
சுன்னாகத்தைத் தொடர்ந்து மன்னாரும் அழிகிறது : சம்பிக்க்க ரணவக்க உறுதிப்படுத்தினார்
சுன்னாகத்தில் வாழ்ந்தவர்களின் நரம்பு மண்டலம் பாதிப்படையலாம்: சம்பிக்கவும் தேவாவும் பொறுப்பு
இனக்கொலை ஆதரவாளர்கள் இருவரின் சந்திப்பின் பின்னணியில்…
குடாநாட்டை அழிக்கும் மின்நிலையத்தில் ஆய்வு நடத்தி காலம் கடத்தப்படுகிறது
இனவழிப்பிற்கு எதிராக முழங்கிய பறை
தண்ணீர் கேட்டவர்கள் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர் : புலம்பெயர் தமிழர்களுக்குச் சவால்
வரலாற்றில் முதல்தடவையாக சூழலை மசுபடுத்தியவர்களைத் தேடும் இன்டட்போல்: தேவா வெளியில்
Exit mobile version