Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுனாமி குட்டையில் மீன்பிடித்த பல்தேசிய நிறுவனங்கள்

2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரழிவுகளுக்காக இலங்கைச் சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச தோற்றுவித்த ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட என்ற தன்னார்வ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணக் கொடுப்பனவுகளே பின்னதாக அவரது ஜனாதிபதி தேர்த்தல் பிரச்சாரத்திற்கான பணமாகப் பயன்படுத்தப்பட்டது என்பது அறிந்ததே.
அதே சுனாமிக் காலத்தில் ஆசிய நாடுகள் முழுவதும் உடைகள், காலணிகள், படுக்கைகள், குடிபான வகைகள் போன்றவற்றை சுனாமி அகதிகளுக்கு வழங்கியவர்களுள் பல்தேசிய பாஷன் நிறுவனங்களும் அடங்கும். பல நிறுவனங்கள் சுனாமிக்காகவே உதவி நிறுவனங்களை தோற்றுவித்தன. பெரும்பாலான நிறுவனங்கள் வேலை செய்யும் தொழிலாளர்களிடமிருந்து வசூலித்த பணத்திலேயே மில்லியன் தொகை பெறுமதிமிக்க ஆடைகளையும் ஏனைய பொருட்களையும் வழங்கின.
River Island, Frox, Wavegames, New Look, D2 and Fat Face, Habitat, Next போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை. அவ்வாறு அவர்கள் வழங்கிய உதவிகளே சுனாமிக்குப் பின்னர் இன்று வரை இலவச விளம்பரமாக அமைந்தது. இலங்கையில் பன்நாட்டு பொருட்களின் முகவர் நிறுவனமாக செயற்படும் ஒடேல் நிறுவனம் கடந்த வருடம் சுனாமிக்கு உதவி செய்த பாஷன் நிறுவனங்களுக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளது.
இந்த நிறுவனங்களின் விற்பனைப் பொருட்களுக்கு அடிமையான மத்தியதர சமூகம் ஒன்று சுனாமி விளம்பரங்களின் பின்னர், மலேசியா, இலங்கை, தாய்வான் போன்ற நாடுகளில் உருவாகியுள்ளது.
‘Cudas Tsunami Men’s Sandal ‘ என்று பெயரிடப்பட்ட பாதணி இந்த நாடுகளில் விற்பனையில் கடந்த வருடத்தில் மட்டும் 20 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.

Exit mobile version