Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுதர்சிங் கைது : ஈ.பி.டி.பி ஐ அழிக்க மகிந்த கும்பல் முடிவு?

douglasயாழ்ப்பாணத்தில் கொள்ளை மற்றும் கப்பம் கோரல் சம்பவங்களுடன் நேரடியான தொடர்புடையதாகக் கருதப்படும் ஈ.பி.டி.பி இன் முக்கிய உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் கோப்பாய் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச செல்வாக்கு மிக்க சுதர்சிங் வடமாகாண தேர்தல் நேரத்தில் கைதானமை தற்செயலானதாகக் கருதமுடியாது. சுதர்சிங் பாலியல் தொழில் முகவராகச் செயற்பட்டார் என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ள. இலங்கை அரச படைகளின் நேரடியான தொடர்பின்றி துரும்பைக்கூட அசைக்க முடியாத யாழ்ப்பாணத்தில் அரச படைகளின் ஒத்துழைப்பின்றி சுதர்சிங் இவ்வாறான கிரிமினல் வலையமைப்பை நடத்தியிருக்க முடியாது.
உலகின் எந்த பாசிச அமைப்புக்களும் தமது ஆதரவாளர்களை நீண்ட காலத்திற்குப் தனியான பலத்துடன் செயற்பட அனுமதிப்பதில்லை. ஈ.பி.டி.பி குழுவின் நடவடிக்கைகளை இதுவரை காலமும் அனுமதித்த இலங்கை அரச பாசிசம் தனது கிரிமினல் நடவடிக்கைகளை ஈ.பி.டி.பி இன் ஊடாகவும் நடத்தி வந்தது. இன்று ஈ.பி.டி.பி ஐ கருணா போன்று சிறீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைப்பதற்கும் அல்லது பலவீனப்படுத்திக் கலைப்பதற்கும் மகிந்த கும்பல் முயற்சிக்கிறது. இந்தக் நடவடிக்கையின் போக்கில் பல கைதுகளும் கொலைகளும் கூட நடைபெறலாம்.
இலங்கைப் பணக்காரர்களுள் ஒருவரான டக்ளஸ் தேவானந்தாவும் அவரது குழுவான ஈ.பி.டி,பியும் தமது மக்கள் விரோத கிரிமினல் நடவடிக்கைகள் ஊடாக மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் கைதும் அழிப்பு நடவடிக்கையும் மகிந்த பாசிஸ்டுக்களுக்கு மக்கள் மத்தியிலான அபிப்ப்ராயத்தை வளர்க்க உதவும்.

Exit mobile version