Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுக்லா மரணம் : ஜனாதிபதி இரங்கல் – மாவோயிஸ்டுக்கள் அறிக்கை

shuklaசத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ம‌றைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மக்கள்மீது தனது படைகளைக்கொண்டு தாக்குதல் நடத்தி அழிவுகளுக்குக் காரணமான அரச ஆதரவுப் பயங்கரவாதி மகேந்திர கர்மா உட்பட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மேமாதன் 25 ம் திகதியன்று மாவோயிஸ்டுக்கள் நடத்திய தாக்குதலில் பலியாகினர்.
“மனிதத் தன்மையற்ற கொடூரங்கள், படுகொலைகள், முடிவில்லாத பயங்கரவாதத்தை பஸ்தார் பழங்குடியின மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட சல்வாஜூடும் எனும் பாசிச குண்டர் படையின் தலைவன் எங்களால் அழித்தொழிக்கப்பட்டுள்ளான். ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் சல்வாஜூடும் குண்டர் படையாலும், அரசின் ஆயுதப் படைகளாலும் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே நாங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளோம்” என்று மாவோயிஸ்டு கட்சியின் சத்தீஸ்கர் மாநில தண்டகாரண்யா சிறப்புப் பிராந்தியக் கமிட்டி கடந்த மே26 அன்று வெளிப்படையாக அறிவித்துள்ளது.
வன்னிப் படுகொலைகளின் போது ஈழத்தில் மக்கள் மீது தாக்குதல் நடத்தி அபிவிருத்தி என்ற பெயரில் மக்கள் மீது தாக்குதல் நடத்திவரும் சிறீ-ரெலோ போன்ற பாசிச குண்டர் படைகளைவிட அதிகளவில் பலம்பெற்ற இந்த அரசின் சல்வாஜூடும் பயங்கரவாத கொலைகாரப் படையினரால் ஏறத்தாழ பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கோரமாகக் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கான கிராமங்கள் தீயிடப்பட்டுச் சாம்பலாக்கப்பட்டுள்ளன.

Exit mobile version