இந்திய இறையாண் மைக்கு எதிராக பேசிய தாக குற்றம்சாட்டப்பட் டுள்ள இயக்குநர் சீமான் புதுவை காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார்.
இலங்கை தமிழ்த் மக்களை பாதுகாக்கக் கோரி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் பங்கேற்று பேசிய திரைப்பட இயக்குநர் சீமான், எல்டிடிஇ அமைப்பை ஆதரித்தும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசினார். இது குறித்து இயக்குநர் சீமான் மீது 4 பிரிவுகளில் புதுச்சேரி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று (பிப்.20) நெல்லையில் கைது செய்யப்பட்ட சீமானை, காவல் துறையினர் புதுச்சேரிக்கு கொண்டு வந்தனர்.
புதுச்சேரி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் வீட்டில் அதிகாலை (பிப். 21) சீமானை காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். இயக்குநர் சீமானை மார்ச் 6வரை புதுவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சீமான் காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.