Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீமான் கைது பற்றி கருத்துச் சொல்ல விரும்பவிலை- இயக்குநர் பாரதிராஜா.

இயக்குநர் பாரதிராஜா தமிழினப் பற்று மிகுந்தவர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பவர் என்று பலர் நம்பிக் கொண்டிருந்தனர். இதில் ஈழத் தமிழர்களும் அடக்கம். ஆனால் தான் ஒரு தேவர் சாதி வெறியன் என்பதையும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவோடும், கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியோடும் கூட்டு வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு சினிமா வியாபாரி என்பதும் இப்போது அம்பலமாகியிருக்கிறது. இயக்குநர் சீமான் ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்று கூட அல்ல தனது சக இயக்குநர் என்று கூட கரிசனம் சிறிதும் இன்றி தனது நிஜ முகத்தை வெளிக்காட்டியுள்ளார் பாரதிராஜா.இயக்குநர் சங்க விழாவை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, சீமான் சிறையில் இருக்கிறார். இயக்குநர் என்கிற முறையில் அவர் இந்த விழாவில் பங்கேற்பாரா? அவர் விடுதலை ஆவதற்கு இயக்குநர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? அவர் கைது பற்றி என்ன நினைகிறீர்கள்? என்று சரமாரியாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.அதற்கு பாரதிராஜா, ‘’சீமான் கைது பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர் கைதுக்கும் இயக்குநர் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவரின் கைது விவகாரம் கட்சி ரீதியானது. அவர் அதை கட்சி ரீதியாகத்தான் அணுகுவார். அவர் இந்த விழாவில் பங்கேற்பாரா இல்லையா என்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது’’என்று தெரிவித்தார். இதுதான் இந்த மனிதரின் உண்மை முகம். இயக்குநர் சங்க விழாவுக்கு யார் தலைமை தாங்குவார் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கிறீர்கள்?

Exit mobile version