Cormorant Strike III’ என்ற மூன்று வாரங்கள் நீடிக்கும் இராணுவக் கூட்டுப் பயிற்சி ஒன்று இலங்கையின் கிழக்கில் நடைபெறுகிறது. பயிற்சியின் இறுதிக்கட்டம் இப்போது நடைபெறுகிறது. 40 இராணுத்தினர் பயிற்சியை மேற்கொள்கின்றனர். சீனா, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்தே இந்த கூட்டுப்பயிற்சியை மேற்கொள்கின்றன. இந்தியாவிற்கு பாகிஸ்தானைப் பற்றியோ, சீனாவைப் பற்றியோ போட்டுக்கொடுத்து தமிழ் ஈழம் பிடித்துவிடலாம் என்று மக்களை ஏமாற்றும் புலம்பெயர் மற்றும் தமிழ் நாட்டு இனவாதிகளின் ஒரு புறம் தமது அரசியலை நடத்திக்கொண்டிருக்க அந்த நாடுகளிடையே பயிற்சி நடைபெற்றது.
மக்களை அணிதிரட்டி புரட்சிகர அரசியல் தலமை ஒன்று மட்டுமே இலங்கையில் தேசிய இனப் ஒடுகுமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். இந்தியாவையோ, சீனாவையோ அன்றி அமரிக்காவையோ திருப்திப்படுத்தி எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது.காட்டிக்கொடுக்க மட்டுமே முடியும்.