கடந்த 23-09-2012 அன்று மெனிக்பாம் முகாமில் இருந்து பலவந்தாமாக இராணுவத்தினரால் வெறியேற்றப்பட்டு அழைத்துவரப்பட்டு சீனியாமோட்டையிலுள்ள முழுமையாக துப்பரவு செய்யப்படாத காட்டுப்பகுதியில் இறக்கிவிடப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று வழங்கியிருந்தது. கேப்பாபிலவு, பிலக்குடியிருப்பு, சூரிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு மேற்படி உதவிகள் வழங்கப்பட்டது.
கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட நிதியில் இருந்து மேற்படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கNஐந்திரன், தேசியஅமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், உபதலைவர் எஸ்.இளங்கோ, இளைஞர் அணித்தலைவர் இ.கிருபாகரன், நிர்வாகச் செயலாளர் இ.சத்தியசீலன் ஆகியோர் இன்று சீனியாமோட்டை மற்றும் சூரிபுரம் சென்று மேற்படி உதவிகளை வழங்கினர்.
சீனியாமோட்டையில் கடந்த 25ஆம் திகதி தொடக்கம் அடிப்படை வசதிகள் இன்றித் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு போதிய உணவு மற்றும் குடிநீர் இல்லை. மலகூட பாவனைக்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர்தாங்கியில் இருந்து நீரை எடுத்துப் பருக வேண்டியிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். அனைவருக்கும் தங்குமிடங்கள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை.
முகாமிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஊடகங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் கருத்து தெரிவித்தமைக்காக முகாமில் தங்கியுள்ள மக்களை இராணுவம் மிகக் கடுமையாக எச்சரித்து வருவதாக மக்கள் எம்மிடம் கூறினர்.
இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிவாரணம் வழங்கும் நிகழ்வுக்கு வருகைதந்து காத்திருந்த கேப்பாபிலவு மக்களிடம் சென்ற இராணுவத்தினர் இன்று நிவாரணம் வழங்கும் நிகழ்வ இல்லை என்றும் எதிர்வரும் புதன்கிழமையே நிவாரணம் வழங்கப்படும் என்றும் பொய்கூறியும் அச்சுறுத்தியும் மக்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இச்சம்பவமானது அடிப்படை வசதிகள் இன்றி சொந்த விருப்பங்களுக்கு மாறாக குடியமர்த்தப்பட்டுள்ள மேற்படி மக்களுக்கு அரசாங்கம் நிவாரண உதவிகளை வழங்காத நிலையில் அந்த மக்களில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் கூட அந்த மக்களுக்கு உதவிகள் வழங்குவதனை இராணுவத்தினரும் அரசும் விரும்பவில்லை என்பதனையே வெளிப்படுத்துகின்றது.
நன்றி
செ.கNஐந்திரன்
பொதுச் செயலாளர்