Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீனா “வான்கார்ட் 2010” அமரிக்காவுக்கு சீனா பதிலடி.

பசிபிக் பிராந்தியத்தில் பதட்டத்தை உருவாக்கும் நோக்கில் தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய போர் பயிற்சிக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. மஞ்சள் கடலை எல்லை யாகக் கொண்ட கிழக்கு கடல் பகுதியில் சீன ராணு வம் தனது மிகப் பெரும் விமானப்படை பயிற்சியை நடத்தியது. பசிபிக் தீவுகள் மீதான இறையாண்மை குறித்து கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடு களிடையே சர்ச்சைகள் புத்துயிர் பெற்றுள்ள சூழ லில் இப்பயிற்சி நடந்துள்ளது.சீனாவான்கார்ட் 2010″ என்று பெயரிடப்பட்ட ஐந்து நாள் விமானப்படை உள்ளிட்ட ராணுவப் பயிற்சி நடைபெறும் என்று சீனா அறிவித்திருந்தது. பல்வேறு பிராந்திய ராணுவ தலை மையகங்களுக்கு இடை யில் தகவல் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் இப்பயிற்சிகள் நடத்தப் படுகின்றன.பயிற்சிகளுக்கென ஒத்தி கைகள் எதுவும் நடைபெற வில்லை. உண்மை போர் நிலையை எதிர்கொள்ளும் வகையில் படைகள் உள் ளதா என்பதைக் கணிக்க பயிற்சிகள் நடத்தப்பட்டன. பயிற்சிகளின் போது செயல் படக் கூடிய ஏவுகணை களும், வெடிகுண்டுகளும் பயன்படுத்தப்பட்டன.ஒருவாரத்துக்கு முன்பு இப்பகுதியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்தின. வட கொரியாவை மனதிற் கொண்டு நடத்தப்பட்ட அப்பயிற்சிகளை சீனா கடு மையாகக் கண்டித்திருக் கிறது. சென்ற மாதம் ஹனோ யில் நடந்த தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப் பின் பிராந்திய குழுவில் பேசிய ஹிலாரி கிளிண்டன் எவ்வித மிரட்டல், அச்சு றுத்தலின்றி தீவுகள் பிரச்ச னைக்கு தீர்வு காண்பது அமெரிக்க நலனுக்கு உகந்த தாக இருக்கும் என்று பேசி னார். ஆசிய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்று சீனா ஹிலாரியின் பேச்சுக்கு கண்டனம் தெரி வித்தது. தெற்கு சீனக் கடல் பகு தியில் உள்ள தீவுகளின் இறை யாண்மை குறித்து தைவான், இந்தோனேசியா, வியட் நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சீனாவுடன் சர்ச்சையில் உள்ளன. இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சைக்கு தீர்வு காண முடியும் என்று சீனா, இந்நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் பலமுனை மேடை மூலம் பிரச்ச னைக்கு தீர்வு காண சில நாடுகள் விரும்புகின்றன. இதன்மூலம் சர்ச்சையில் அமெரிக்காவும், நுழைந்து விடும் என்று சீனா கருது கிறது.

Exit mobile version