Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீனா உலகின் 2-வது பொருளாதார வல்லரசு.

உலகின் பொருளாதார வலி மையில் சீனா இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியது. வெகுகாலமாக இரண்டாம் இடத்தில் ஆதிக்கம் செலுத் திய ஜப்பான் கீழே இறங்கி விட்டது.உலகின் மிகப் பெரும் ஏற்றுமதியாளராக சீனா வலுவடைந் துள்ளது. ஏராளமான கார்களை வாங்கும் நாடாக சீனா மாறி யுள்ளது. உலகின் மிகப் பெரும் எஃகு உற்பத்தியாளராக சீனா உயர்ந்துள்ளது. அதன் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் ராணுவ செல்வாக்கு உயர்ந்து வருகிறது.சீனாவின் வளர்ச்சி ஆண் டொன்றுக்கு பத்து விழுக்காடு அதிகரித்து வருகிறது. அதே வேளையில் ஜப்பானின் வளர்ச்சி ஆண்டொன்றுக்கு 2-3 விழுக்காடுகளில் இருக் கும் என்று மதிப்பிடப்பட்டுள் ளது. ஜப்பானின் உள் நாட்டு மொத்த உற்பத்தி (விலை மற் றும் பருவகால மாறுதலுக்கு உட்படாதது) 2010 – 11 நிதி யாண்டில் முதல் காலாண்டில் 1286 லட்சம் கோடி டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில் சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 1335 லட்சம் கோடி டாலர் களாக இருந்தது. இதற்கு முன் பும், சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி முன்னிலைக் குச் சென்று திரும்பியுள்ளது. ஆனால், தற்போது அந்நிலை மை இல்லை.1968ம் ஆண்டில் மேற்கு ஜெர்மனியை தள்ளிவிட்டு ஜப்பான் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 1980களில் அது வெறும் ரியல் எஸ்டேட் புரட் டல் வேலை எனத் தெரியவந் தது. 1991ல் ஜப்பானின் பொரு ளாதாரம் சிதறியதுடன் தேக்க மடையவும் தொடங்கியது. அதி லிருந்து ஜப்பான் மீளவே யில்லை. ஜப்பானின் பொருளா தாரம் சுருங்கி வருகிறது. வய தானவர்களைக் கொண்ட சுருங்கும் மக்கள் தொகை, தொடர்ந்து பலவீனமாக உள்ள உள்நாட்டு கிராக்கி, பண வீழ்ச்சி, ஏற்றுமதியில் தொட ரும் சரிவு ஆகியவை ஜப்பான் அரசை மிரளவைக்கின்றன.சீனாவின் நிலைமை முற் றிலும் மாறுபட்டது. அதனு டைய வளர்ச்சி பிரம்மாண்ட மாக உள்ளது. ஜப்பானின் மிகப் பெரும் வர்த்தக நாடாக சீனா வளர்ந்து நிற்கிறது. வள ரும் நாடுகள் மற்றும் ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட செல்வந்த நாடுகள் ஆகியவற் றிடம் இருந்து ஆதாரங்களை யும், இயந்திரங்களையும் உற் பத்தி பொருட்களையும் அள் ளிச் செல்வதில் சீனாவுக்கு அடங்காத தாகம் உள்ளது.அதே வேளையில் உலகம் மிகப் பெரும் பொருளாதாரப் பின்னடைவில் இருந்து மீட்சி யடைய சீனாவின் கிராக்கி மிகப் பெரும் பங்கு வகித்துள் ளது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் மீட்சிக்கும் சீனா பெரிதும் உதவியுள்ளது.

Exit mobile version