ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெறும் ரியோ ப்ளஸ் 20 மாநாட்டின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீனத் தலைவர் வென் ஜியோபோ ஆகியோர் இதுகுறித்து சுமார் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மேலும் வெளியுறவு செயலர் ரஞ்சன்மாத்தாய் கூறுகையில், இந்தியா-சீனா இடையே எல்லைப்பிரச்னை,நதிநீர் மற்றும் இரு தரப்பு பொருளாதா ஒத்துழைப்பு மற்றும் இந்திய உள்கட்டமைப்பு துறைகளில் சீனா முதலீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோகன்சிங், சீன பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார் என்றார்.
மிக விரைவில் இந்தியாவிலிருந்து அரிசி சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.
ஆசியப் பிரந்தியத்தில் இதுவரை இந்தியா உடாகவே அமரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டது. சீனாவிற்கு எதிரான செயற்பாடுகள் என்ற அளவில் இந்தியக் கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்து அமரிக்கத் தலையீடுகள் அதிகரித்துள்ளன. சீனாவுடனான புதிய நெருக்கம் அமரிக்க – இந்திய நட்பை மீளமைத்துக் கொள்வதற்காக இந்திய அரசு விடுக்கும் வேண்டுகோளாகவோ குறைந்தபட்ச எச்சரிக்கையாகவோ கருதலாம்.